வியாழன், 17 மார்ச், 2011

தொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:


இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவேண்டிய 12 தொகுதிகள் பற்றி ஏற்கனவே அளிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதொகுதிகளை ஒதுக்கீடு செய்வதோடு மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று வலியுறுத்தினோம்.
 
எங்கள் பொதுச் செயலாளரை சந்தித்து கலந்து ஆலோசித்துவிட்டு இன்று இரவே சி.பி.எம். அலுவலகத்திற்கு வந்து சி.பி.எம். பேச்சுவார்த்தைக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதாக அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர்கள் கூறினார்கள். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க. போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ல் வெற்றிபெற்ற 6 தொகுதிகளுக்கும், மேலும் சி.பி.எம். போட்டியிட விரும்பி அளித்துள்ள பட்டியலில் உள்ள பல தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க இயலாது.
 
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிற போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரும் தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறையல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதோடு அ.தி.மு.க. அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.


ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக நாளை (17.3.2011) சென்னையில், கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஜெயலலிதா 18.3.2011 முதல் 10.4.2011 வரை அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம்

செவ்வாய், 15 மார்ச், 2011

முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம்
1. துறைமுகம்

2. வானியம்பாடி

த‌ற்போது முஸ்லிம் லீக் க‌ட்சிக்கு வானிய‌ம்பாடி தொகுதியில் அப்துல் பாசித், அற‌வாக்குறிச்சி தொகுதியில் க‌லிலூர் ர‌ஹ்மான் என்று இர‌ண்டு எம்.எல்.ஏ.க‌ள் இருக்கிறார்க‌ள். இதில் வானியம்பாடி மட்டும் தற்போது கிடைத்திருக்கிறது. துறைமுகம் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன்தான். கடந்த தேர்தலிலேயே அவர் 300 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேசி வந்தார்கள். இந்தநிலையில் இன்று (மார்ச் 15) இரவு தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திருமாவளவனும் கருணாநிதியும் கையெழுத்திட்டுள்ளனர்.

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று (மார்ச் 15) இரவு அறிவாலயத்திற்கு ராமதாஸ் வந்து தொகுதிகளை இறுதி செய்தார். ஒப்பந்தத்தில் ராமதாஸும் கருணாநிதியும் கையெழுத்திட்டனர்.

பா.ம.க்.போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 48 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். 34 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த தேர்தல் நிலவரம் இங்கே..

புதன், 9 மார்ச், 2011

பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு கொடுத்திருக்கிறது: கருணாநிதி

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

செவ்வாய், 8 மார்ச், 2011

தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு

2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக இறுதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கு இந்த முறை சீட் இல்லை. அருந்ததியர் மக்கள் கட்சி, விவசாய தொழிலாளர் கட்சி, தமிழ்மாநில தேசிய லீக், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இடங்கள் இல்லை.

தி.மு.க. - 121

காங்கிர‌ஸ் - 63

பா.ம.க. - 30

விடுத‌லைச் சிறுத்தைக‌ள் - 10

கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7

முஸ்லிம் லீக் - 2

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1

மொத்த தொகுதிகள் - 234

ஞாயிறு, 6 மார்ச், 2011

கூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்டி

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் என்கிற அறிவிப்பு வந்த பிறகு இன்று (மார்ச் 6) இரவு 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய தி.மு.க. அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், நெப்போலியன் ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு முதல்வர் கருணாநிதி வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்தது. வெளியே வந்த கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தார் பேட்டி விவரம்:

தொகுதி வாரியாக வாக்காளர்கள்!

மாவட்டவாரியாக தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் இங்கே...

1. திருவள்ளூர் மாவட்டம்
1. கும்மிடிபூண்டி
ஆண் வாக்காளர்கள்: 1,05,145
பெண் வாக்காளர்கள்: 1,06,492
அரவாணிகள்: 9
மொத்த வாக்காளர்கள்: 2,11,646