செவ்வாய், 1 டிசம்பர், 2009

மாவட்டங்கள் வாரியாக சட்டசபைத் தொகுதிகள்

சென்னை மாவட்டம்
1. ராயபுரம்
2. துறைமுகம்
3. ராதாகிருஷ்ணன் நகர்
4. பெரம்பூர்
5. எழும்பூர் (தனி)
6. அண்ணா நகர்
7. தியாகராய நகர்
8. ஆயிரம் விளக்கு
9. மைலாப்பூர்
10. சைதாப்பேட்டை
11. கொளத்தூர்
12. வில்லிவாக்கம்
13. திரு.வி.க நகர் (தனி)
14. விருகம்பாக்கம்
15. வேளாச்சேரி
16 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி

வியாழன், 19 மார்ச், 2009

எப்படி நடந்தது தொகுதி மறுசீரமைப்பு ?

தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு முன்பும் பின்பும் தொகுதிகள் எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி, தமிழக நாடாளுமன்ற தொகுதிகளில் அடங்கியிருக்கும் சட்டசபைத் தொகுதிகள் வாரியாக, இங்கே அலசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த தொகுதிகளும் இப்போது மாற்றப்பட்டிருக்கும் தொகுதிகளின் பட்டியல்..

1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி


1. பழனி - கும்மிடிப்பூண்டி (தனி)

2. ஒட்டன்சத்திரம் - பொன்னேரி

3. வேடசந்தூர் - பூந்தமல்லி (தனி)

4. காங்கேயம் - மாதவரம்

5. நத்தம் - திருவள்ளூர்

6. வெள்ளைக்கோவில் - ஆவடி

* புதிதாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உருவானது.

* ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. தொகுதியில் இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இங்கே சேர்க்கப்பட்டது.

* புதிதாக உருவாக்கப்பட்ட மாதவரம், ஆவடி சட்டசபைத் தொகுதிகள் இங்கே இணைக்கப்பட்டன.

வெள்ளி, 13 மார்ச், 2009

தொகுதிகள் மறு சீரமைப்பு ஒர் அலசல்

மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி 2006ம் ஆண்டில் தொடங்கி 2008ம் ஆண்டு வரையில் நடைபெற்று முடிந்தது. இந்திய அரசு நியமித்த ‘தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’ இதற்கான பணிகளை மேற்கொண்டது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் தொகுதிகள் வாரியாக ஆலோசனை மற்றும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில்தான் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்து, முதலில் வரைவு பட்டியல் 2007ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வெளியிட்டது தேர்தல் கமிஷன். அதன் பிறகு இறுதிப் பட்டியல் வெளியானது.