வெள்ளி, 31 டிசம்பர், 2010

தீர்ப்பை மாற்றிய நாட்டாமை!‘‘

‘‘சாகும் வரை தி.மு.க.வில்தான் இருப்பேன். என் உடலில் தி.மு.க. கொடிதான் போர்த்தப்படும்.’’  2006 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு நடந்த தி.மு.க. மண்டல மாநாட்டில் இப்படி முழுங்கினார் திரைப்பட நடிகர் சரத்குமார். அடுத்து சில நாட்களில் தி.மு.க.வில் இருந்து விலகினார். அதே சூட்டோடு அ.தி.மு.க.வில் தஞ்சமடைந்தார். 2006 சட்டசபைத் தேர்தலில் நடந்த மிகப் பெரிய கூத்து இது.

வியாழன், 30 டிசம்பர், 2010

கூட்டணி முடிவு: ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு அதிகாரம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று மாலை (டிசம்பர் 30) சென்னை வானகரம் ஏரியாவில் நடைபெற்றது. முதலில் செயற்குழு கூட்டம் முடிந்து அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கூட்டணி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் முக்கியமான தீர்மானம்.

பிரதமர் கலந்து கொள்ளும் தமிழக அரசு விழா திடீர் ரத்து

சென்னை அடையாறு ஏரியாவில் உள்ள பூங்காவை பல கோடி ரூபாய் செலவில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. 'அடையாறு பூங்கா' என்ற பெயரில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவை பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 3ம் தேதி திறப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து ராசா அமைச்சர் பதவி ராஜினாமா வரை போன நிலையில் இந்த விழா எதிர்ப்பார்ப்பை கூட்டியிருந்தது. ஆனால் திடிரென்று இந்த நிகழ்ச்சியை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்திருக்கிறார்.

புதன், 29 டிசம்பர், 2010

க‌ட்டாய‌ ம‌த‌ மாற்ற‌ த‌டை ச‌ட்ட‌த்தை ர‌த்து செய்துதான் நான்தான்: ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (டிச‌ம்ப‌ர் 29) வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதி 2006ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் "தமிழ் நாடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்" நீக்கம் செய்யப்பட்டது என்ற ஒரு தவறான செய்தி பிரபல நாளிதழ்கள் சிலவற்றில் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தவறான செய்தி குறித்து சிறுபான்மை இன மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கீழ்க்கண்ட நிகழ்வுகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன்.

வெள்ளி, 24 டிசம்பர், 2010

தி.மு.க. ஆட்சிக்கு மரண அடி: ஜெயலலிதா பேச்சு

எம்.ஜி.ஆரின் 23-ஆவது ஆண்டு நினைவு நாளில் இன்று (டிசம்பர் 24) எம்.ஜி.ஆர். சமாதியில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சமாதியில் மலர் வளையம் வைத்து ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வியாழன், 23 டிசம்பர், 2010

க‌ர்த்த‌ர் அருளால் அ.தி.மு.க‌. ஆட்சி: கிறிஸ்தும‌ஸ் விழாவில் ஜெ பேச்சு

அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பேரூராட்சியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா இன்று (டிசம்பர் 23)கலந்து கொண்டார்.இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றார் ஜெயலலிதா. அங்கு, கேரள மாநில அ.தி.மு.க. சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதன், 22 டிசம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் பலூன் 'புஸ்" ஆகி விடும்: வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிக்கை:

தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய அமைச்சர் கபில்சிபல் நேற்றிரவு தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு திடுக்கிடக் கூடிய தகவல்களை ஆணித்தரமான முறையில் விளக்கியுள்ளார்.1999ம் ஆண்டில் - பாரதீய ஜனதா ஆட்சியில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் - கடைப்பிடிக்கப்பட்டதொலைத்தொடர்பு கொள்கையினால், மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடியாகும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சம்பந்தமாக இந்த இழப்பு - இது இப்போது சொல்லப்படுவது போன்ற கற்பனையின் அடிப்படையில் சொல்லப்படும் தொகை அல்ல; நடைமுறைக் கணக்குப்படி ஏற்பட்ட இழப்புத் தொகையாகும்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

பாதிப்பை ஏற்படுத்தாத பார்வர்டு பிளாக்!

2006 சட்டசபைத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி அதிக எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. காரணம் அப்போது அந்த கட்சியின் தலைவராக இருந்த நடிகர் கார்த்திக்தான். கோபாலபுரம், போயஸ் கார்டன் என்று இரண்டு இடங்களிலும் கூட்டணிக்காக அலைந்து கடைசியில் தனியாக களமிறங்கியது பார்வர்டு பிளாக். தென் மாவட்டங்களில் பார்வர்டு பிளாக்குக்கு கனிசமான செல்வாக்கு இருந்த நிலையில் கார்த்திக்கின் வரவும் சேர்ந்து கொள்ள தேர்தலில் பார்வர்டு பிளாக் பாதிப்பை உண்டாக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இந்த கணிப்பு பொய்யாகி போனது.

திங்கள், 20 டிசம்பர், 2010

ராசா மீது ந‌ட‌வ‌டிக்கையா? க‌ருணாநிதி பேட்டி

முத‌ல்வ‌ர் கருணாநிதி இன்று (டிச‌ம்ப‌ர் 20) சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: சி.பி.ஐ. சார்பில் இரண்டாவது முறையாக தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றுள்ளதே?

பதில்: இன்றைக்கா சோதனை நடந்துள்ளது. உங்கள் வீட்டில் ஏதோ சோதனை நடந்ததைப் போல பதற்றம் காட்டுகிறீர்களே?

வெள்ளி, 17 டிசம்பர், 2010

தேர்தலில் அரசியல் வாரிசுகள்!

2006 சட்டசபைத் தேர்தலில் நிறைய அரசியல் வாரிசுகள் களமிறங்கின. அவர்களை பற்றி குறிப்புகள் இங்கே...

* மறைந்த தி.மு.க. அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் மகன் அன்பில் பெரியசாமி. இவரது சகோதரர் அன்பில் பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு, அன்பில் பெரியசாமி திருச்சி - 1 தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

* மறைந்த தி.மு.க. அமைச்சர் தங்கப்பாண்டியின் மகன் தங்கம் தென்னரசு. அருப்புக்கோட்டையில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் ஆனார்.

ராசாவுக்கு முன்பு இருந்தவர்களும் புனிதமான துறவிகள் இல்லை: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (டிசம்பர் 17) வெளியிட்ட அறிக்கை:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். 2001ம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் நான் வரவேற்கிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் இந்த நாட்டின் முதன்மை விசாரணை அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினை கடைபிடித்ததன் காரணமாகத்தான் இது போன்றதொரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று.

செவ்வாய், 14 டிசம்பர், 2010

தேர்தலில் நடிகர்கள்!

தேர்தல் சீசன் தொடங்கிவிட்டால் கட்சிகளுக்கு கொண்டாட்டமோ இல்லையோ கோடம்பாக்கத்தில் கோலாகலம்தான். சினிமாவில்  சம்பாதித்துவிட்டு மார்கெட் சரிந்தவர்களுக்கு அடுத்த வருமான ஸ்பாட் ஆகிவிட்டது அரசியல். கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில்தான் சினிமா நட்சத்திரங்களின் படையெடுப்பு அதிகமாக இருந்தது. நாடு முழுவதும் பல நட்சத்திரங்களை களமிறங்கியது பி.ஜே.பி. அதேப் போல் கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வில் நிறைய நடிகர்கள் கோதாவில் குதித்தனர்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

பிறை (முஸ்லிம் லீக்) சூரியனை (தி.மு.க.) விட்டு அகலாது: கருணாநிதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு இன்று (டிசம்பர் 11) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை :

தி.மு. கழகமும் இஸ்லாமியர்களுடைய பாசறையாக விளங்குகின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கமும் இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக நெருங்கிய உறவு கொண்ட சமுதாய, அரசியல் பேரியக்கங்கள் என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள். இங்கே நம்முடைய விழாத் தலைவர் - மாநாட்டுத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் பட்டத்தை, விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார்கள்.

சனி, 11 டிசம்பர், 2010

“கை”யும் கை நழுவிப் போய்விடுமோ.. ஜெயலலிதா அறிக்கை

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து ஜெயலலிதா இன்று (டிசம்பர் 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அறிக்கை விவரம்:

“கை”யும் கை நழுவிப் போய்விடுமோ என்ற அச்சத்தில், தி.மு.க. - காங்கிரஸ் இடையே சிண்டு முடிய நான் முயற்சிப்பதாக ஒரு புனைசுருட்டு அறிக்கையை கருணாநிதி வெளியிட்டு இருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.

புதன், 27 அக்டோபர், 2010

வீரபாண்டி ஆறுமுக‌ம் அன்ப‌ர‌ச‌ன் ப‌த‌வியை ப‌றிக்க‌ வேண்டும்: ஜெய‌ல‌லிதா அறிக்கை

ஜெய‌ல‌லிதா இன்று (அக்டோப‌ர் 27) வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க. அரசினுடைய அமைச்சர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, சட்டம்-ஒழுங்கை காக்கக்கூடிய அரசாக இல்லாமல், சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது என்பது தெளிவாகிறது.

திங்கள், 18 அக்டோபர், 2010

அழகிரி நாடு: மதுரையில் ஜெயலலிதா பேச்சு

ம‌துரையில் இன்று (அக்டோபர் 18) தி.மு.க. அரசை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் ஜெயலலிதா பேசினார்.

வைகை நதிக்கரை இன்று ஒரு நாள் மட்டும் கடற்கரையாய் மாறுகின்ற வண்ணம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணுக்குள் அடக்க முடியாத அளவுக்கு திரளாகக் கூடியிருக்கும் பாண்டி நாட்டு சகோதரர்களே - சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பான வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். வைகை நதிக்கரைக்கு நான் வரக்கூடாது என்று கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை எல்லாம், நீங்கள் அனுப்பிய அழைப்பிதழ்களாகவே ஏற்றுக்கொண்டு நீதியுரை மதுரைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

பாராளுமன்ற தொகுதி வாரியாக சட்டமன்ற தொகுதிகள்

இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக தமிழக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இங்கே...

1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி
1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருவள்ளூர்
4. பூந்தமல்லி (தனி)
5. ஆவடி
6. மாதவரம்

புதன், 25 ஆகஸ்ட், 2010

தி.மு.க.வில் சேர்ந்தார் சி.பி.எம். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி

திருப்பூர் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி தமிழக அரசு பாராட்டு விழா எடுக்க போவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கோவிந்தசாமி இன்று (ஆகஸ்ட் 25) முதல்வர் கருணாநிதி முன்பு தி.மு.க.வில் இணைந்தார். இந்த இணைப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

ச‌ட்ட‌ச‌பைக்கு வ‌ராம‌ல் ஓடி ஒளிந்த‌வ‌ர்தான் க‌ருணாநிதி: ஜெய‌ல‌லிதா

ஜெய‌ல‌லிதா இன்று (ஆக‌ஸ்ட் 25) வெளியிட்ட அறிக்கை:

மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்ந்து எடுக்கும் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற அளவில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்து இருப்பதை பார்க்கும் போது, ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல்’ என்ற பழமொழிதான் என் நினைவிற்கு வருகிறது. உண்மை நிலை என்னவென்றால், புதிய மாநில தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்யும் கூட்டத்தில் நியமனக் குழு உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவராகிய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை ஏற்று கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்று நான் எண்ணியிருந்தேன்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌ல்: ஜெய‌ல‌லிதா ஆலோசனை

அடுத்த‌ ஆண்டு ந‌டைபெறும் ச‌ட்ட‌ச‌பைத் தேர்த‌லுக்கு அ.தி.மு.க. இப்போதே தயாராகி வருகிறது. இன்று (ஆகஸ்ட் 24) ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அ.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சட்டமன்றப் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தேர்தல் “கவுண்ட் டவுன்”: ஜெவுக்கு கருணாநிதி பதில்

தி.மு.க‌. எம்.பி.க‌ள் கூட்ட‌ம் அறிவால‌ய‌த்தில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. கூட்டம் முடிந்து முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும், சர்வ தேச நாடுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும், ஐ.நா. சபைக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் கூட இலங்கை அதிபர் நிறைவேற்றவில்லை என்று எல்லோரும் சொல்கிற சூழ்நிலையில் மத்திய வெளி உறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ் அவர்கள் உங்களை வந்து பார்த்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஏதாவது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?

புதன், 18 ஆகஸ்ட், 2010

ஜெயலலிதா அளித்த இஃப்தார் விருந்து

அ.தி.மு.க. சார்பில் இன்று (ஆகஸ்ட் 18) சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வைகோ, சி.பி.ஐ. தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன். சி.பி.எம்.யை சேர்ந்த என். வரதராஜன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ், ஹைதர்அலி, டாக்டர் கிருஷ்ணசாமி, உட்பட பலர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது:

செவ்வாய், 9 மார்ச், 2010

கன்னியாகுமரி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கன்னியாகுமரி தொகுதி
தோவாலை தாலுக்கா, அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி) தேரூர், மருங்கூர், குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள், தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி), அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி) , கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி).

சனி, 27 பிப்ரவரி, 2010

திருநெல்வேலி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சங்கரன்கோவில் (தனி) தொகுதி
சங்கரன்கோவில் தாலுக்கா (பகுதி) கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர், முக்கூடுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி, மைப்பறை, சங்குப்பட்டி, வெள்ளாகுளம், அ.கரிசல்குளம், குலசேகரப்பேரி, காரிச்சாத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பகுளம், பெருங்கோட்டூர், அழகாபுரி, வடக்கு குருவிகுளம், குருஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டாகுறிச்சி, வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீந்தேவர்குளம், அத்திப்பட்டி, இராமலிங்கபுரம், தெற்கு குருவிகுளம், வாகைகுளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம், மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலாங்குளம், கோ.மருதப்பபுரம், இலந்தைகுளம், உசிலங்குளம், பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி, களப்பாளங்குளம், நாலாந்துலா, கே.கரிசல்குளம், சாயமலை, மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி (மைனர்), நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டாடைக்கட்டி, குலசேகரமங்கலம் சேத்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சண்டா, வடக்கு பனவடலி, நரிக்குடி, அச்சம்பட்டி, வெள்ளப்பனேரி, தடியம்பட்டி, மூவிருந்தாளி, வன்னிக்கோனேந்தல், தேவர்குளம், சுண்டங்குறிச்சி, மற்றும் மேல இலந்தைகுளம் கிராமங்கள், திருவேங்கடம் (பேரூராட்சி) மற்றும் சங்கரன்கோவில் (நகராட்சி).

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

தூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. விளாத்திகுளம் தொகுதி
விளாத்திகுளம் தாலுக்கா, எட்டயபுரம் தாலுக்கா, ஓட்டப்பிடாரம் தாலுக்கா (பகுதி) -குதிரைக்குளம், நாகம்பட்டி, பசுவந்தனை, முத்துராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், குமாரஎட்டையபுரம், எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், முள்ளூர், முத்துக்குமாரபுரம்,வேப்பலோடை, தெற்கு கல்மேடு, வேடநத்தம்,கொல்லம்பருப்பு, சந்திரகிரி, கவீரபாண்டியபுரம், க.தளவாய்புரம், வெள்ளாரம், பி.துரைச்சாமிபுரம், கீழமுடிமன், கீழமங்கலம், சில்லாங்குளம், எஸ்.குமாரபுரம், கே.சண்முகபுரம், டி.துரைசாமிபுரம் மற்றும் பட்டிணமருதூர் கிராமங்கள்.

விருதுநகர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ராஜபாளையம் தொகுதி
இராஜபாளையம் தாலுக்கா (பகுதி) வடக்கு வெங்காநல்லூர், சம்மந்தபுரம், மேலப்பாட்டம்கரிசல்குளம், கொத்தன்குளம், அரசியார்பட்டி, செட்டிகுளம், அயன் கொல்லன்கொண்டான், திருச்சானூர், புதுப்பாளையம், ஜமின் கொல்லன்கொண்டான், சுந்தரராஜபுரம், சோலைச்சேரி, தெற்கு தேவதானம், இளந்திரைகொண்டான், சேத்தூர் (ஆர்.எப்.) த்துசாமிபுரம், வடக்கு தேவதானம், தெற்கு வெங்காநல்லூர், கோவிலூர், நல்லமங்கலம், புத்தூர், சொக்கநாதபுத்தூர் மற்றும் மேலூர்துரைசாமிபுரம் கிராமங்கள், இராஜபாளையம் (நகராட்சி), செய்தூர் (பேரூராட்சி) தளவாய்புரம் (சென்சஸ் டவுன்) மற்றும் செட்டியார்பட்டி (பேரூராட்சி).

ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பரமக்குடி (தனி) தொகுதி
பரமக்குடி தாலுக்கா, கழுதி தாலுக்கா (பகுதி) த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வலாந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம் மற்றும் மண்டலமாணிக்கம் கிராமங்கள். அபிராமம் (பேரூராட்சி).

சிவகங்கை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. காரைக்குடி தொகுதி
தேவகோட்டை தாலுக்கா, காரைக்குடி தாலுக்கா(பகுதி) பாலையூர், சாக்கொட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டன், புக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, புதூர், அமராவதி மற்றும் கல்லுப்பட்டி கிராமங்கள். கண்டனூர் (பேரூராட்சி) புதுவயல்(பேரூராட்சி) மற்றும் காரைக்குடி (நகராட்சி).

தமிழக சட்டசபைத் தொகுதிகள்

1. கும்மிடிப்பூண்டி
2. பொன்னேரி (தனி)
3. திருத்தணி
4. திருவள்ளூர்
5. பூந்தமல்லி (தனி)
6. ஆவடி
7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
9. மாதவரம்
10. திருவொற்றியூர்

புதுக்கோட்டை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி
கந்தர்வகோட்டை தாலுக்கா, குளத்தூர் தாலுக்கா (பகுதி) செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள். கீரனூர் (பேரூராட்சி), ஆலங்குடி தாலுக்கா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).

தஞ்சாவூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. திருவிடைமருதூர் (தனி) தொகுதி
திருவிடைமருதூர் தாலுக்கா, கும்பகோணம் தாலுக்கா (பகுதி) பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநாரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.

திருவாரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி
திருத்துறைபூண்டி தாலுக்கா, மன்னார்குடி தாலுக்கா (பகுதி) ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

அரியலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. குன்னம் தொகுதி
குன்னம்: செந்துறை தாலுக்கா, குன்னம் தாலுக்கா (பகுதி) திருமாந்துறை, பெண்ணக்கோணம் (தெற்கு), அத்தியூர் (தெற்கு), அகரம்சீகூர், வசிஷ்டபுரம், கீழ்ப்பெரம்பலூர், வயல்ப்பாடி, கிளுமத்தூர் (தெற்கு), கிளுமத்தூர் (வடக்கு), வடக்கலூர், பெருமத்தூர் (வடக்கு), சிறுமத்தூர், கிழப்புலியூர் (வடக்கு), கீழ்ப்புலியூர் (தெற்கு), பெறுமத்தூர் (தெற்கு) ஆண்டிகுரும்பலூர், நன்னை (மேற்கு), நன்னை (கிழக்கு), ஓலைப்பாடி (மேற்கு), துங்கபுரம் (வடக்கு), துங்கபுரம் (தெற்கு), பரவாய் (கிழக்கு), பரவாய் (மேற்கு), மலைராயநல்லூர், எழுமூர் (கிழக்கு), எழுமுர் (மேற்கு), அசூர், சித்டளி (கிழக்கு), சித்தளி (மேற்கு), பேரளி (வடக்கு), பேரளி (தெற்கு), ஒதியம், பெரியம்மாபாளையம், குன்னம், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டைக்குடி, காடூர் (வடக்கு), காடூர் (தெற்கு) பெரியவெண்மணி (கிழக்கு), பெரியவெண்மணி (மேற்கு), மேலமாத்தூர், அழகிரிப்பாளையம், தொண்டப்பாடி, கூத்தூர், ஆதனூர் (தெற்கு), ஆதனூர் (வடக்கு), கொட்டரை, சாத்தனூர், சிறுகன்பூர் (கிழக்கு), சிறுகன்பூர் (மேற்கு), வரகுபாடி, காரை (கிழக்கு), காரை (மேற்கு), தெரணி, ஆயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் (மேற்கு) கொளத்தூர் (கிழக்கு) திம்மூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், ஆத்தூர், சில்லக்குடி (வடக்கு) மற்றும் சில்லக்குடி (தெற்கு) கிராமங்கள். லப்பைக்குடிக்காடு (பேரூராட்சி).

நாகப்பட்டிணம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. சீர்காழி (தனி) தொகுதி
சீர்காழி தாலுக்கா (பகுதி) (3 கிராமங்கள் தவிர அதாவது கீழையூர், மேலையூர் மற்றும் வாணகிரி நீங்கலாக)

திருச்சி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மணப்பாறை தொகுதி
மணப்பாறை தாலுக்கா (பகுதி) புதூர், வையமலைப்பாளையம், வெள்ளாளப்பட்டி, அனியாப்பூர், வீரமலை (ஆர்.எப்), சீகம்பட்டி, உசிலம்பட்டி, பொய்கைமலை (ஆர்.எப்), வடுகப்பட்டி, வேங்கைக்குறிச்சி, அமையபுரம், அமையபுரம் (ஆர்.எப்), நல்லாம்பிள்ளை, ஜை.கோவில்பட்டி, வி.பெரியப்பட்டி, தவளவீரம்படி, முகவனூர் (வடக்கு), முகவனூர் (தெற்கு), செக்கனம், பழையங்கோட்டை, ஐ.ரெட்டியாப்பட்டி, செட்டியாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பொய்கைப்பட்டி, சாம்பட்டி, சுலியாப்பட்டி, ஆதம்பட்டி, எப்.கீழையூர், தொட்டியப்பட்டி, தாதனூர், ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகம்பட்டி, பண்ணப்பட்டி, (கிழக்கு), பண்ணப்பட்டி (மேற்கு), அயன்ரெட்டியாப்பட்டி, வையம்பட்டி, மூக்குரெட்டியாப்பட்டி, குமாரவாடி, நடுப்பட்டி, புதுவாடி, புதுக்கோட்டை, பொன்னம்பலப்பட்டி, எலமணம், கண்ணூத்து, குமரிக்கட்டிமலை (ஆர்.எப்), கருப்பூர், புத்தாநத்தம் திருநெல்லிப்பட்டி, வெள்ளையக்கோன்பட்டி, பிராம்பட்டி (வடக்கு), பிராம்பட்டி (தெற்கு), தேனூர், அயன்புதுப்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூர், கண்ணுக்குழி, கொடும்பப்பட்டி, பல்லக்குறிச்சி, கலிங்கப்பட்டி கிழக்கு, பழுவஞ்சி மேற்கு, முத்தாழ்வார்பட்டி, கருமலை, அம்மாச்சத்திரம், எண்டப்புலி, கஞ்சநாயக்கன்பட்டி, வேலாக்குறிச்சி, வேங்கடநாயக்கன்பட்டி, மருங்காபுரி, டி.இடையப்பட்டி, யாகபுரம், நல்லூர், காரைப்பட்டி, செவல்பட்டி, இக்கரைகோசக்குறிச்சி, அக்கியம்படிட், அழகாபுரி, லெக்கநாயக்கன்பட்டி, தெத்தூர் மற்றும் செவந்தாம்பட்டி கிராமங்கள், பொன்னம்பட்டி (பேரூராட்சி), மணப்பாறை (நகராட்சி).

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தேனி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ஆண்டிப்பட்டி தொகுதி
ஆண்டிப்பட்டி தாலுக்கா, உத்தமபாளையம் தாலுக்கா (பகுதி) கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திபாறை (ஆர்.எப்) கிராமங்கள், காமயகவுண்டன்பட்டி (பேரூராட்சி), கூடலூர் (பேரூராட்சி) மற்றும் ஹைவேஸ் (பேரூராட்சி).

திங்கள், 22 பிப்ரவரி, 2010

பெரம்பலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பெரம்பலூர் (தனி) தொகுதி
வேப்பந்தட்டை தாலுக்கா, பொரம்பலூர் தாலுக்கா, குன்னம் தாலுக்கா (பகுதி) - சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.

கரூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. அரவக்குறிச்சி தொகுதி
அரவக்குறிச்சி தாலுக்கா, கரூர் தாலுக்கா (பகுதி) வேட்டமங்கலம் (மேற்கு), வேட்டமங்கலம் (கிழக்கு), கோம்புபாளையம், திருக்காடுதுறை மற்றும் நஞ்சைபுகளுர் கிராமங்கள், டி.என்.பி.எல். புகலூர் (பேரூராட்சி) புஞ்சைபுகளுர் (பேரூராட்சி) மற்றும் புஞ்சை தோட்டக்குறிச்சி (பேரூராட்சி).

மதுரை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மேலூர் தொகுதி
மேலூர் தாலுக்கா

சனி, 20 பிப்ரவரி, 2010

ஈரோடு மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ஈரோடு (கிழக்கு) தொகுதி
ஈரோடு தாலுக்கா (பகுதி) பிராமண பெரிய அக்ரஹாரம் (பேரூராட்சி) ஈரோடு (நகராட்சி) மற்றும் வீரப்பன்சத்திரம் (பேருராட்சி).

நீலகிரி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. உதகமண்டலம் தொகுதி
குந்தா தாலுக்கா, உதகமண்டலம் தாலுக்கா (பகுதி) கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு, உதகமண்டலம் மற்றும் தும்மனட்டி கிராமங்கள், சோலூர் (பேரூராட்சி) மற்றும் உதகமண்டலம் (நகராட்சி) குன்னூர் தாலுக்கா (பகுதி) கேத்தி (பேரூராட்சி).

திண்டுக்கல் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பழனி தொகுதி
கொடைக்கனல் தாலுக்கா (பகுதி) -அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி(வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி(வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு, தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தன்நாயக்கன்பட்டி, ஏ.காளையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்களம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிக்க நாயக்கன்பட்டி, கோதைமங்களம், பச்சலை நாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, பழனி, சிவகிரிபட்டி மற்றும் தட்டான்குளம் கிராமங்கள், பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி) மற்றும் நெய்காரபட்டி (பேரூராட்சி).

கோவை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. மேட்டுப்பாளையம் தொகுதி
மேட்டுப்பாளையம் தாலுக்கா, கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) பிலிச்சி கிராமம், வீரபாண்டி (பேரூராட்சி) மற்றும் கூடலூர் (பேரூராட்சி).

திருப்பூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. தாராபுரம் (தனி) தொகுதி
தாராபுரம் தாலுக்கா

புதன், 17 பிப்ரவரி, 2010

நாமக்கல் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ராசிபுரம் (தனி) தொகுதி
ராசிபுரம் தாலுக்கா (பகுதி) பொன்பரப்பிபட்டி, மின்னக்கல் அக்ரஹாரம், அனந்தகவுண்டம்பாளையம், குமாரபாளையம், அண்ணாமலைப்பட்டி, கீரனூர், பல்லவநாய்க்கன்பட்டி, மலையாம்பாளையம், குட்டலாடம்பட்டி, மேலூர், கீழுர், கிடமலை, ஆயில்பட்டி, நாவல்பட்டி, மங்களபுரம், ஈஸ்வரமூர்த்திபாளையம், திம்மநாய்க்கன்பட்டி, நாரைக்கிணறு பிளாக். மி (ஆர்.எப்.), முத்துருட்டு, ஆயிபட்டி, நாரைக்கிணறு, நாரைக்கிணறு தெற்கு (ஆர்.எப்.), கார்கூடல்பட்டி, மூலப்பள்ளிபட்டி, மலையாம்பட்டி, புதூர்மலையாம்பட்டி, கல்லாங்குளம், புதுப்பாளையம், தேங்கல்பாளையம், ஆலாம்பட்டி, ஆலவாய்ப்பட்டி, நாச்சிபட்டி, மதியம்பட்டி, பொரசலபட்டி, அக்கரைப்பட்டி, செம்மாண்டப்பட்டி, நடுப்பட்டி, சௌதாபுரம், மாட்டுவேலம்பட்டி, பழத்தின்னிப்பட்டி, மூலக்காடு, முத்துகாளிபட்டி, கட்டனாச்சம்பட்டி, கோனேரிபட்டி, காக்காவேரி, வடுகம்முனியம்பாளையம், பட்டணம் முனியம்ப்பாளையம், வடுகம், மூலக்காடு, கரியாம்பட்டி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பெரியக்குறிச்சி, மாவார், பெரப்பஞ்சோலை, பெரியக்கோம்பை, புதுப்பள்ளப்பட்டி, மூலக்குறிச்சி, பெரியசேக்கடி, வரகூர்கோம்பை, பச்சகவுண்டம்பட்டி, கொளக்கமேடு, தொட்டியம்பட்டி, சந்திரசேகரபுரம் அக்ரஹாரம், இராசிபுரம், ஆண்டகளூர், அணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டி, எல்லபாளையம், பொன்குறிச்சி, கொப்பம்பட்டி, ஆயிபாளையம், கொமாரபாளையம், குருக்கபுரம், அணைப்பாளையம், முருங்கபட்டி, சிங்களாத்தபுரம், மோளப்பாளையம் மற்றும் சின்னசேக்கடி கிராமங்கள்.

வெண்ணந்தூர் (பேரூராட்சி), அத்தனூர் (பேரூராட்சி), ஆர்.புதுப்பட்டி (பேரூராட்சி), பட்டிணம் (பேரூராட்சி), இராசிபுரம் (நகராட்சி) மற்றும் பிள்ளாநல்லூர் (பேரூராட்சி).

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

சேலம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. கங்கவல்லி (தனி) தொகுதி
கங்கவல்லி தாலுக்கா, ஆத்தூர் தாலுக்கா (பகுதி) ஊனத்தூர், வேப்பநந்தம், வரகூர், சிறுவாச்சூர், மணிவழுதான், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சார்வாய், தேவியாக்குறிச்சி, தலைவாசல், பட்டுத்துறை, நாவக்குறிச்சி, புத்தூர், நத்தக்கரை, பெரியேரி, ஆறகளுர், தியாகனூர், ஆராத்தி அக்ரஹாரம், மும்முடி, காமக்காபாளையம், வடகுமரை, தென்குமரை, சாத்தப்பாடி, பனவாசல், நாவலூர், சித்தேரி, கோவிந்தம்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் கிராமங்கள்.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

தர்மபுரி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. பாலக்கோடு தொகுதி
பாலக்கோடு: பாலக்கோடு தாலுக்கா (பகுதி), பஞ்சப்பள்ளி, பெரியானூர், நம்மாண்டஅள்ளி, சின்னேகவுண்டனஅள்ளி, சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், மாரவாடி, திம்மராயனஅள்ளி, முருக்கல்நத்தம், பிக்கனஅள்ளி, கருக்கனஅள்ளி, வெலகஅள்ளி, ஜக்கசமுத்திரம், கிட்டனஅள்ளி, சிக்கதோரணபெட்டம், சாமனூர், போடிகுட்லப்பள்ளி, அத்திமுட்லு, கெண்டனஅள்ளி, மாரண்டஅள்ளி, சென்னமேனஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, செங்கபசுவந்தலாவ், பி.செட்டிஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, அனுமந்தாபுரம், எலுமிச்சனஅள்ளி, முக்குளம், கும்பாரஅள்ளி, பச்சிகானப்பள்ளி, கெரகோடஅள்ளி, காரிமங்கலம், பொம்மஅள்ளி, நரியானஅள்ளி, புலிக்கல், கொண்டசாமஅள்ளி, சிக்கார்தஅள்ளி, ஜெர்த்தலாவ், கரகதஅள்ளி, பாலக்கோடு, போலபடுத்தஅள்ளி, கொட்டுமாரணஅள்ளி, நாகனம்பட்டி, பெரியாஅள்ளி, அடிலம், திண்டல், தெல்லனஅள்ளி, பண்டரஅள்ளி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், மோலப்பனஅள்ளி, பூனாத்தனஅள்ளி, சென்றாயனஅள்ளி, தொன்னேனஅள்ளி, பைகஅள்ளி, கனவேனஅள்ளிநல்லூர், புதிஅள்ளி, பெலமாரஅள்ளி, திருமால்வாடி, பேவுஅள்ளி, சீரியனஅள்ளி, எராசூட்டஅள்ளி, பொப்பிடி, எருதுகுட்டஅள்ளி, எரனஅள்ளி, சீராண்டபுரம், குஜ்ஜாரஅள்ளி, உப்பாரஅள்ளி, ரங்கம்பட்டி மற்றும் கிராமங்கள்.

மாரண்டஅள்ளி (பேரூராட்சி), கரியமங்கலம் (பேரூராட்சி) மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி)

கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகள் எல்லை

1. ஊத்தங்கரை (தனி) தொகுதி
ஊத்தங்கரை தாலுக்கா போச்சம்பள்ளி தாலுக்கா (பகுதி) கன்னாண்டஹள்ளி, பொம்மேபள்ளி, சிவம்பட்டி, நாகம்பட்டி, பிச்சுகவுண்டனஹள்ளி, பட்ரஹள்ளி, சோனரஹள்ளி, ரெங்கம்பட்டி, கொண்டிரெட்டிப்பட்டி, கெண்டிகாம்பட்டி, பாளேதோட்டம், மூக்கம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, பாரண்டபள்ளி, தாதம்பட்டி மற்றும் ஜிங்கில்கதிரம்பட்டி கிராமங்கள்.

கடலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. திட்டக்குடி (தனி) தொகுதி
(உளுந்தூர்பேட்டை): திட்டக்குடி தாலுக்கா

சனி, 13 பிப்ரவரி, 2010

விழுப்புரம் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செஞ்சி தொகுதி
செஞ்சி தாலுக்கா (பகுதி)
எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவலப்புரை, சிறுவாடி (ஆர்.எப்), ஆலம்பூண்டி, தென்பாலை, சொக்கனந்தல், கலத்தம்பட்டு, மேல் அறங்குணம், மேல் அத்திப்பட்டு, குழப்பலூர், மேல்பாப்பம்பட்டி, செம்மேடு, வீரமநல்லூர், சத்தியமங்கலம், நயமபடி, பரதந்தாங்கல், பசுமலைத்தாங்கல், பெருங்காப்பூர், முட்டக்காடு (ஆர்.பி), சிங்கவரம், ஊரணிதாங்கல், அஞ்சாசேரி, மேல் எடபாளயம், பொன்பட்டி, ஜெயங்கொண்டம், நரசிங்கராயன்பேட்டை, கோணை, சொன்னலூர், ஒடியாத்தூர், சின்னபொன்னம்பூண்டி, மணலப்பாடி, பெரியாமூர், தேவனாம்பேட்டை, சொரத்துப் பெரியன்குப்பம், புலிப்பட்டு, புதுப்பாளையம், பாக்கம், பேட்டை (செஞ்சி), புட்டகரம், காமகரம், தாதன்குப்பம், காட்டுசித்தாமூர், மாதப்பூண்டி, கஞ்சூர், நாகலாம்பட்டு, நல்லான்பிள்ளைபெற்றாள், உளியம்பட்டு, செத்தவரை, தடாகம், போத்துவாய், பழவலம், மல்லரசன்குப்பம், மழவந்தாங்கல், கெங்கவரம், கக்கன்குப்பம், தாண்வசமுத்திரம், பாடிப்பள்ளம், தச்சம்பட்டு, அத்தியூர், சிட்டாம்பூண்டி, சிறுநாம்பூண்டி, அப்பம்பட்டு, கவரை, கடகம்பூண்டி, மீனமூர், ஜம்போதி, கோம்மேடு, தென்புதுப்பட்டு, மாவட்டம்பாடி, பாலப்பட்டு, காரை (ஆர்.எப்), காரை, வரிக்கல், மேல் அருங்குணம், முள்ளூர், தாண்டவசமுத்திரம் (ஆர்.எப்), துத்திப்பட்டு, பொன்னன்குப்பம், கோணலூர், அணையேறி, புலிவந்தி, மாத்தூர் திருக்கை, ஓட்டம்பட்டு, திருவதிக்குன்னம் மற்றும் மடப்பாறை கிராமங்கள், செஞ்சி (பேரூராட்சி) மற்றும் அனந்தபுரம் (பேரூராட்சி)

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகள் எல்லை

1. செங்கம் (தனி) தொகுதி
செங்கம் தாலுக்கா (பகுதி)
குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புலதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆண்டிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக்கம், சேரந்தாங்கல், கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, ஓலகலப்பாடி, கொலமஞ்சனூர், மலமஞ்சனூர் டி.வேளுர், செ.ஆண்டாப்பட்டு, தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர்செக்கடி, கீழ்பாச்சார், மேல்பாச்சார், மோத்தல்க்கல், மேல்முத்தனூர், ஆத்திப்பாடி, புதுர்செக்கடி, ஜம்போடை, போந்தை, நாராயணக்குப்பம், அப்புநாய்க்கன்பாளையம், திருவிடத்தனூர், எடத்தனூர், தென்முடியனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், ராயண்டபுரம், புத்தூர்செக்கடி, பீமரப்பட்டி, மேல்மலச்சி, அக்கரப்பட்டி, செம்மம்பட்டி, பெருங்கொளத்தூர், தொண்டமானூர், சதக்குப்பம், உண்ணாமலைப்பாளையம், வாழவச்சனூர், கோட்டையூர், பெலாமரத்தூர், வண்ணாங்குட்டை, பண்டீரேவ், படபஞ்சமரத்தூர், மேல்சிலம்படி, கீழ்தட்டீயாப்பட்டு, மேல்தட்டீயாப்பட்டு, புலியூர், ஊர்கவுண்டனூர், கிளையூர், எருகம்பட்டு நெல்லிவாய், அத்திப்பட்டு, பெருமுட்டம், கல்லாத்தூர், மேல்பட்டு, சின்னகீழ்பட்டு மற்றும் கீழ்பட்டு கிராமங்கள், செங்கம் (பேரூராட்சி).

வேலூர் மாவட்ட தொகுதிகள் எல்லை

1. அரக்கோணம் தொகுதி
அரக்கோணம் தாலுக்கா (பகுதி):
செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, பரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தபுரம். ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.

அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி).

காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. சோழிங்கநல்லூர் தொகுதி
தாம்பரம் தாலுக்கா:
நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்டலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழதிவாக்கம் (உள்ளகரம்) (பேரூராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோழிங்கநல்லூர் (பேரூராட்சி)

சென்னை மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14

2. பெரம்பூர் தொகுதி
சென்னை மாநகராட்சி வார்டு எண் 1,2 மற்றும் 32 முதல் 36 வரை.

திருவள்ளூர் மாவட்ட தொகுதிக‌ள் எல்லை

1. கும்மிடிப்பூண்டி தொகுதி
கும்மிடிப்பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்கா

வியாழன், 11 பிப்ரவரி, 2010

தொகுதி சீரமைப்புக்கு முன் சீரமைப்புக்கு பின்...

தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பில் நிறைய தொகுதிகள் காணாமல் போயின. புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டன. தொகுதி சீரமைப்பிறகு முன்பு இருந்த தொகுதிகளும் சீரமைப்பிறகு பிறகு இருந்த தொகுதிகளின் விவரங்களும் மாவட்ட வாரியாக இங்கே தரப்பட்டிருக்கிறது.

சென்னை மாவட்டம்
சீரமைப்பிற்கு முன்பு - சீரமைப்பிறகு பின்பு

1. ராயபுரம் - ராயபுரம்
2. துறைமுகம் - துறைமுகம்
3. ராதாகிருஷ்ணன் நகர் - ராதாகிருஷ்ணன் நகர்
4. பூங்கா நகர் - நீக்கப்பட்டது
5. பெரம்பூர் - பெரம்பூர்
6. புரசைவாக்கம் - நீக்கப்பட்டது
7. எழும்பூர் (தனி) - எழும்பூர் (தனி)
8. அண்ணாநகர் - அண்ணாநகர்
9. தியாகராய நகர் - தியாகராய நகர்
10. ஆயிரம் விளக்கு - ஆயிரம் விளக்கு
11. சேப்பாக்கம் - நீக்கப்பட்டது
12. திருவல்லிக்கேணி - நீக்கப்பட்டது
13. மைலாப்பூர் - மைலாப்பூர்
14. சைதாப்பேட்டை - சைதாப்பேட்டை

புதிய தொகுதிகள்
1.கொளத்தூர்
2.வில்லிவாக்கம்
3.திரு.வி.க நகர் (தனி)
4.விருகம்பாக்கம்
5.வேளச்சேரி
6.சேப்பாக்கம் ‍- திருவல்லிக்கேணி