செவ்வாய், 21 டிசம்பர், 2010

பாதிப்பை ஏற்படுத்தாத பார்வர்டு பிளாக்!

2006 சட்டசபைத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி அதிக எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. காரணம் அப்போது அந்த கட்சியின் தலைவராக இருந்த நடிகர் கார்த்திக்தான். கோபாலபுரம், போயஸ் கார்டன் என்று இரண்டு இடங்களிலும் கூட்டணிக்காக அலைந்து கடைசியில் தனியாக களமிறங்கியது பார்வர்டு பிளாக். தென் மாவட்டங்களில் பார்வர்டு பிளாக்குக்கு கனிசமான செல்வாக்கு இருந்த நிலையில் கார்த்திக்கின் வரவும் சேர்ந்து கொள்ள தேர்தலில் பார்வர்டு பிளாக் பாதிப்பை உண்டாக்கலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இந்த கணிப்பு பொய்யாகி போனது.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியிலும் பார்வர்டு பிளாக் கட்சி களமிறங்கியது. மொத்தம் 60 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகள் தனித் தொகுதிகள்.

போட்டியிட்ட 60 இடங்களிலும் மண்ணை கவ்வியது பார்வர்டு பிளாக். ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பார்வர்டு பிளாக் மொத்தம் வாங்கிய ஓட்டுகள் 10 லட்சத்து 33 ஆயிரத்து 369. வாக்கு சதவீதம் வெறும் 1.20தான்.

கருத்துகள் இல்லை: