செவ்வாய், 11 ஜனவரி, 2011

49 ஓ - அப்படின்னா என்னங்க?

போட்டியிடும் வேட்பாளர்கள் எவரையும் பிடிக்காமல், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை எனில், அதையும் பதிவு செய்யும் வசதிதான் 49 ஓ. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இதற்கென ஒரு பட்டனை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்தலுக்கு தேர்தல் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்ய விண்ணப்பம் 17 -ஏ -வைப் பூர்த்தி செய்து தரலாம் என 1961-ம் ஆண்டு தேர்தல் சட்டம் பிரிவு 49 ‘ஓ’வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்படி வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்குச் சென்று 17 -ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம். எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை, அதேசமயம் இந்தியக் குடிமகனாக தனது வாக்கைப் பதிவு செய்ய விரும்புவோர் இந்த புதிய முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

In this method there is a lack of privacy
இதற்க்கு பதிலாக வேற ஏதும் முறை இல்லையா ..
ஏனெனில் நமது privacy பறிக்கப்படுகிறது ..

வாக்குச் சாவடிக்குச் சென்று 17 -ஏ விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் அளிக்கலாம்.

அந்த அதிகாரி நம்மை ஒரு மர் பார்ப்பர்..(மற்றவர்களும் தான்).
ஓட்டு போடும் இயந்திரதில்யே இந்த வசதி இருந்தால் நல்லா இருக்கும்

பெயரில்லா சொன்னது…

எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரத்திலேயே இந்த வசதி இருந்தால்தான் சரியாக இருக்கும். ஓட்டுப்பதிவு எந்திரத்தை கொண்டு வர முடிந்தவர்களுக்கு இந்த வசதியையும் கொண்டு வர என்ன சிரமம் என்பதுதான் புரியவில்லை. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வரும் தேர்தலுக்கு சாத்தியமில்லை.

தமிழ் உலகம் சொன்னது…

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்

Best Online Jobs சொன்னது…

பயனுள்ள பதிவு
நன்றி