திங்கள், 3 ஜனவரி, 2011

பிரத‌ம‌ரை ச‌ந்தித்தார் க‌ருணாநிதி

நேற்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை விமான நிலையத்தில் முதல்வர் கருணாநிதி வரவேற்க செல்ல‌வில்லை. அவ‌ருக்கு ப‌திலாக‌ துணை முத‌ல்வ‌ர் ஸ்டாலின்தான் ஏர்போர்ட் சென்றார். இர‌வு க‌வ‌ர்ன‌ர் மாளிகையில் த‌ங்கிய‌ பிர‌த‌ம‌ரைக்கூட‌ க‌ருணாநிதி போய் பார்க்காத‌ நிலையில் இன்று (ஜ‌ன‌வ‌ரி 3) காலை திடிரென்று ம‌ன்மோக‌ன் சிங்கை க‌ருணாநிதி ச‌ந்தித்தார்.

நேற்றைய தினம் வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கருணாநிதி நீண்ட நேரம் கலந்து கொண்டிருந்தபடியால், அங்கு செய்யப்பட்டிருந்த அதிக ஒளி ஏற்பாட்டின் காரணமாக கண்களில் நீர் வடிந்து கொண்டே இருந்ததால், பிரதமரை வரவேற்கவும், சந்திக்கவும் திட்டமிட்டிருந்தபடி செல்ல இயலாத நிலையேற்பட்டதால், பிரதமரை இன்று காலையில் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலையில் கருணாநிதி டாக்டர் அகர்வால் மருத்துவமனைக்குச் சென்று, கண்ணுக்கு சிகிச்சை செய்து கொண்டு, நேரடியாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். பிரதமர் மன்மோகன் சிங் கருணாநிதியை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று, அரை மணி நேரத்திற்கு மேல் உரையாடினார். சந்திப்புக்குப் பின்னர் முதலமைச்சர் புறப்படும் நேரத்திலும் பிரதமர் கார் வரையில் வந்திருந்து வழியனுப்பி வைத்தார்.

இந்த‌ ச‌ந்திப்புக்கு பிற‌கு க‌ருணாநிதி அளித்த‌ பேட்டி:

கேள்வி: பிரதமரைச் சந்தித்த போது என்னென்ன விஷயங்கள் குறித்துப் பேசினீர்கள்?

பதில்: தமிழகத்தில் ஏற்பட்ட பெரு மழை, வெள்ளம் பற்றிப் பேசினோம். மீண்டும் மழை வரக் கூடும் என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு நிவாரண நிதியை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசு இதற்கு விரைவில் நிதி உதவி அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.

கேள்வி: நேற்றைய தினம் பிரதமரைப் பார்க்க நீங்கள் செல்லாததால் நகரில் பெரிய பரபரப்பு ஏற்பட்டதே?

பதில்: நேற்றைய தினம் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி. அதிலே பல பேர் பேச வேண்டியிருந்தது. அதனால் தாமதமாகி விட்டது. சந்திக்க முடியவில்லை. இன்று சந்தித்தேன்.

கேள்வி: பிரதமர் அடையார் பூங்காவைத் திறந்து வைக்காதது, தி.மு.கழகத்திற்கு, தமிழக அரசிற்கு வருத்தமாக இருக்கிறதா?

பதில்: வருத்தம் ஒன்றும் கிடையாது. பொருத்தமான காரணங்களைத்தானே சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: காங்கிரஸ் - தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது?

பதில்: எனக்கும் உங்களுக்கும் இருக்கிற அளவு இருக்கிறது.

1 கருத்து:

சதீஷ் குமார் சொன்னது…

தி.மு.க. உறவு எப்படி இருக்கிறது?

இருக்கிற அளவு இருக்கிறதுஇதையும் படிச்சி பாருங்க

அரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...!