செவ்வாய், 11 ஜனவரி, 2011

தேர்தல் பட்டிமன்ற படங்கள்!

தமிழ் புத்தாண்டு முதல் நாள். பொங்கல் திருநாளில் சிறப்பு பட்டி மன்றத்தை ஒளிபரப்ப போகிறது கலைஞர் டி.வி. பட்டிமன்றத்தின் தலைப்பு. தி.மு.க.வின் செல்வாக்கும் புகழும் வளரக் காரணம் கலைஞரின் சமூக தொண்டே! கலை இலக்கிய பணியே! ஆட்சித் திறனே! கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, ஜெகத்ரட்சகன், பீட்டர் அல்போன்ஸ், என்று அறிவாலயத்தின் ஆஸ்தான வித்துவான்கள்தான் பேசுகிறார்கள். பட்டிமன்றத்தின் நடுவர் இனமான பேராசிரியர் அன்பழகன்தான்


இந்த பட்டிமன்றத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 11) மாலை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. பட்டிமன்றத்தை பார்ப்பதற்காக முதல்வர் கருணாநிதியும் வந்தார். அவருடன் ராசாத்தி அம்மாள், துணை முதல்வர் ஸ்டாலின், வைரமுத்து, ஆர்.எம்.வீரப்பன், லியோனி என்று நிறைய பிரபலங்கள் பட்டிமன்றத்தை ரசித்து கேட்டிருக்கிறார்கள். சில மாதங்களில் தேர்தல் வருவதால் இந்த பட்டிமன்றம் அரசியல் சாயம் பூசிக் கொண்டது.

பட்டிமன்ற படங்களையும் பார்த்து ரசியுங்கள்!

1 கருத்து:

தமிழ்மலர் சொன்னது…

தேர்தல் சிறப்பு வலை பூ ...

உடனுக்குடன் செய்திகளை தர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கது ...