திங்கள், 3 ஜனவரி, 2011

பிரதமரை வரவேற்க‌ கருணாநிதி போகாதது ஏன்?

சென்னையில் ஜனவரி 3ம் தேதி நடக்கும் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை வரவேற்க முதல்வர் கருணாநிதி செல்லவில்லை. துணை முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமரை வரவேற்றார். மன்மோகன் சிங் ஏர்போர்ட்டிற்கு வந்த போது கவிஞர் வைரமுத்து புத்தக வெளியிட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார்.
அடையாறு பூங்கா திறப்பு விழாவிற்காக பிரதமர் மன்மோகன் சிங் தேதி எல்லாம் கொடுத்த நிலையில் அந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கிடைக்காததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு காரணம் சொன்னது.  ஸ்பெக்டரம் விவகாரத்தில் காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கு இடையே உரசல்கள் வெடித்து வரும் நிலையில் அடையாறு பூங்கா திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது அரசியலில் அதிர்வலைகளை கிளம்ப்பி இருக்கிறது. இதற்கு பதிலடியாகதான் என்னவோ பிரதமரை வரவேற்க முதல்வர் கருணாநிதி ஏர்போட்டிற்கு செல்லாமல் புறக்கணித்திருக்கிறார். சென்னை வந்த பிரதமர் இரவு கவர்னர் மாளிகையில்தான் தங்கினார். அவரைக்கூட போய் நேரில் கருணாநிதி சந்திக்கவில்லை.  இதனால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்குள் புகைச்சல்கள் அதிகமாகி வருகின்றன. இப்போது நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் கூட்டணிக்கு வேட்டு வைப்பது போலவே இருக்கின்றன.

4 கருத்துகள்:

சண்முககுமார் சொன்னது…

அருமையான பதிவு

இதையும் படிச்சி பாருங்க

எழுந்து நட லட்சியப் பாதையில்...

வலைச்சரம் சொன்னது…

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.

துளசி கோபால் சொன்னது…

ஏன் வரவேற்கப் போகலையா?

அது ஒன்னுமில்லை. தூக்கிட்டுப்போக ஆள் இருந்துருக்காது.... ஐ மீன் நடக்க முடியாதவரை......

ராவணன் சொன்னது…

பேரரசர் போனால் என்ன இளவரசர் போனால் என்ன?

மன்மோகன் வெறும் சொம்புதானே...
சாரி அம்புதானே...அதுக்கு இளவரசர் சென்றதே அதிகம். இளவரசர் உடன் இருக்கும் மாமா சுப்ரமணியம்...
இல்லை மா.சுப்ரமணியம் சென்றாலே போதும்.

நானாக இருந்தால் மீனம்பாக்கம் வார்டு கவுன்சிலரை மட்டுமே அனுப்பியிருப்பேன்.மன்மோகனுக்கு தனது தராதரம் தெரியாதா?