செவ்வாய், 4 ஜனவரி, 2011

ம‌.ம.க. தொகுதி உடன்பாடு குழு அமைப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி உயர்நிலைக் குழு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் கூடியது. மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழுவின் உறுப்பினர்களான ஹைதர் அலி, அப்துல் சமது, ரஹமத்துல்லா,ஹாரூன் ரஷீத், ரிபாயி, தமிமுன் அன்சாரி, ஜெயினுல் ஆபிதீன், முகம்மது கவுஸ், சம்சுதீன் நாசர் உமரி, கோவை உமர், பேராசிரியர் ஹாஜாகனி, ஜுனைத், எம்.நாசர், உட்பட பலர் கலந்து கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடுகள் குறித்து அ.தி.மு.க.வுடன் ம.ம.க. சார்பில் பேச்சு வார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டது. ஜவாஹிருல்லாஹ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி, ம.ம.க. பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது, த.மு.மு.க. பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, ம.ம.க. பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கூட்டணி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, ஊழல் மிகவும் மலிந்துள்ள நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஊழல் மிகுந்த திமுக ஆட்சியை அகற்ற, மனிதநேய மக்கள் கட்சி அங்கம் வகித்து வரும் அ.தி.மு.க. கூட்டணியை மேலும் பலப்படுத்தி, 2011 சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெறப் பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது.

ஜனவரி 31ம் தேதிக்குள் மாநில பொதுக் குழுவை நடத்துவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: