வியாழன், 13 ஜனவரி, 2011

இளைஞன் படத்தை பார்த்தார் கருணாநிதி

ஸ்பெக்ட்ரம், அழகிரி முறுக்கல், சென்னை சங்கமம், சட்டசபை, என்று 1.70 லட்சம் கோடிகள் பிரச்சனை இருந்தாலும் சினிமா பார்க்கவும் கருணாநிதிக்கு நேரம் எப்படிதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. கலைஞரின் வசனத்தில் வெற்றிகரமாக தியேட்டரை விட்டு போடப்போகும் இளைஞன் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.


அந்த படத்தை இன்று (ஜனவரி 13) மாலை சென்னை ஃபோர் பிரேம் தியேட்டரில் முதல்வர் கருணாநிதி பார்த்து ரசித்தார். மனைவி தயாளு அம்மாள், துணை முதல்வர் ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி துர்கா, வைரமுத்து, அமைச்சர் துரைமுருகன், மகன் மு.க.தமிழரசு, மகள் செல்ல்வி, இயக்குநர் அமிர்தம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன், படத்தின் தயாரிப்பாளர் மார்ட்டின், படத்தின் கதாநாயகனும் கவிஞருமான பா.விஜய், உதயநிதி ஸ்டாலின் என்று நிறைய வி.ஐ.பி.கள் படத்தை பார்த்து ரசித்தார்களாம்.

படம் பார்க்கும் படங்கள்


1 கருத்து:

P.M.சரன் சொன்னது…

விலைவாசி உயர்வு,சட்டம் ஒழுங்கு சீர்கேடு,ஆளும்கட்சியினரின் அராஜகம்,வாழ்விழந்த ஈழத்தமிழரின் வயிற்றெறிச்சல்,என தமிழ் இனமே,மனம் தீப்பற்றியெரியும் வேலையில்,பிடில் வாசித்த நீரோ மண்ணன் போல சினிமா கூத்தாடிகளை வைத்து தனக்கு தானே பாராட்டுவிழா நடத்துவதும்,பிராடுகும்பல்களின் தயவில் கதைவசனம் எழுதி படம் எடுப்பதும்,அதை தனக்குதானே ரசிப்பது என தறிகெட்டதனத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார் கருணாநிதி. விரைவில மக்கள் பதிலுக்கு எழுதபோகும் கதைவசனத்தத கருணாநிதி சந்திக்கதான் வேண்டும்...!