திங்கள், 28 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: செங்கோட்டையன்


''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக சொன்னதை, தன்னைத்தான் சொன்னார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அ.தி.மு.க.வை தனது அரசின் சாதனைகளால் உலகம் முழுவதும் அறியும் வகையில், அடையாளம் காட்டிஎம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்தவர் ஜெயலலிதா. இவையெல்லாம் நேற்று கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்குதெரியாமல் இருப்பதில் வியப்பே இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என கூறிக் கொள்ளும் விஜயகாந்த், சோதனைக் கட்டத்தின் போது எங்கிருந்தார்?அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவைக் குறை சொல்ல விஜயகாந்த்துக்கு எந்த தகுதியும் இல்லை. வரலாறுகளை எல்லாம் இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்''  ‍குடிக்காரன் அறிக்கை தொடர்பாக விஜயகாந்துக்கு செங்கோட்டையன் கொடுத்த பதிலடி அறிக்கை (2006 அக்டோபர் 25)

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

ராசாத்தி, கனிமொழி, நிலவிவகாரம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 27) வெளியிட்ட அறிக்கை:

சில மாதங்களுக்கு முன்பு, களங்கத்திற்கு ஆளான அரசியல்-வணிகர் தரகர்
நீரா ராடியாவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராசாத்திக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து இந்திய ஊடகங்கள் விரிவாக செய்திகளை வெளியிட்டன.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்

''உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்கள் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை தி.மு.க.வினர் கடைப்பிடிக்கவே இல்லை. இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது?
இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், த‌வறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார் கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.

சனி, 26 பிப்ரவரி, 2011

காங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி பேட்டி

அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 26) காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தி.மு.க. குழுவில் ஸ்டாலின் டி.ஆர். பாலு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் 70 தொகுதிகளுக்கு மேல் கேட்டு வரும் நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் ச‌ற்றும் எதிர்பார்க்கவில்லை.

இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும் தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொது மக்கள் நேரிலேயே பார்த்து வருகின்றனர்.

உழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஜெயலலிதா முடித்துவிட்டார். தே.மு.தி.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. மட்டுமே பாக்கி.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ஜெயலலிதா

''தே.மு.தி.க. சாதித்து விட்டது என்கிறார்கள். அந்தக் கட்சி வெறும் 3 சதவீத இடங்களில்தான் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. இதே 3 சதவீத இடங்களை நமது தோழமைக் கட்சியான ம.தி.மு.க. கூட பெற்றிருக்கிறது. ஊழலை ஒழிப்பேன், வீட்டுக்கு வீடு ரேஷன் பொருட்களை வழங்குவேன் என்று கூறுவதெல்லாம் குடிகாரன் பேச்சைப் போன்றதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும்.

அ.தி.மு.க. தே.மு.தி.க. கூட்டணி வைபவ படங்கள்

அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்காந்தின் தே.மு.தி.க. ஒருவழியாக இணைந்துவிட்டது. அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தொடர்பான படங்கள் இங்கே...

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.


அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. சேருமா? என்று கடந்த சில மாதங்களாக நிலவி வந்த செய்திக்கு இன்று முற்றுப்புள்ளி விழுந்திருக்கிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் வந்து கூட்டணி உறுதி செய்தனர்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 23) அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளரும், மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண்மைத் துறை அமைச்சருமான ந‌ரேந்திரநாத் டே, தேசிய செயலாளரும், மாநில தேர்தல் பார்வையாளருமான ஜி. தேவராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஞ.ஏ. கதிரவன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.எஸ். ஜெயராமன், எம். ராஜசேகர், தமிழ் மாநில நிதிச் செயலாளர் ஆர். மாயத்தேவர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

புதன், 23 பிப்ரவரி, 2011

அ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை பிப்ரவரி 5 முதல் 23ம் தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 23ம் தேதி வரை 12,268 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 1,503 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கட்சிக்காரர்கள் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 10,553 மனுக்களும் புதுச்சேரியில் 181 மனுக்களும் கேரள மாநிலத்தில் 31 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிறைகள்* போலீஸ் அனுமதியுடன் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் ரகளை செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அது 6 மாத தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


* ஓட்டுப் பதிவுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டும். மீறிபிரசாரம் செய்தால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.


* வேட்பாளருக்காக வேறு யாரும் செலவு செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதுசட்டப்படி குற்றமாகும்.


* கள்ள ஓட்டுப்போட்டால் 1 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும்.


* ஓட்டுப் போட வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். 


* வாக்காளர்களை வாகனங்களில் ஓட்டுச் சாவடிக்குஅழைத்துச் செல்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.


* ஓட்டுச் சாவடி ஊழியரோ அல்லது காவலில் நிற்கும் போலீஸாரோ குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பேசினாலோ அல்லது ஓட்டுப் போடும்படி தூண்டினாலோ 6 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமோ சேர்த்து விதிககப்படும்.


* வாக்குச் சாவடி தலைமை அதிகாரிக்குக் கீழ்படிய மறுத்து கலாட்டா, ரகளைசெய்பவர்களுக்கு 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.


* ஓட்டுச் சாவடி அருகே சொந்தக் கட்டடங்களில் நின்று கொண்டு ஒலிபெருக்கி மூலம்பிரசாரம் செய்தால் 3 மாத கடுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன்புமணி

''மக்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை சிறப்பு பொருளாதர மண்டலம் என்ற பெயரில் பறித்து, தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். ஆனால், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மின்வெட்டு பிரச்னையால் தமிழ்நாட்டில் உள்ள 80 சதவிகிதம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின் வெட்டால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்படைந்திருக்கிறது.'' - 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி முழக்கம். (2009 மே 6 இருங்காட்டுக்கோட்டை மேவலூர்குப்பம் பிரச்சாரம்).

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்

''இன்னும் ஒரே தடவை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருண்டு போய்விடும். அவர் ஒரு நடிகைதான், ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் ஒரே சாதனை ஆண்டுக்கு ரூ. 24,000 கோடிக்கு மது விற்றதும் பல லட்சம்பேரை குடிக்கு அடிமையாக்கியதும்தான். சசிகலாவின் பினாமிகள் பிழைப்பதற்காக அரசே மதுக் கடைகளை எடுத்து நடத்தி, மக்களை குடிக்கு அடிமையாக்கியுள்ளது. தன்னை சேது சமுத்திரத் திட்ட நாயகன் என்று சொல்லிக் கொள்ளும் வைகோ, இப்போது அந்தத் திட்டத்தைஎதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். இதற்குப் பெயர் தான் பச்சை சந்தர்ப்பவாதம்.''  2006 தேர்தலில் ராமதாஸ் முழக்கம். (2006 ஏப்ரல் 7 கும்மிடிப்பூண்டி).

திங்கள், 21 பிப்ரவரி, 2011

டாப் 3 சிறிய, பெரிய‌ தொகுதிகள்!

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர்தான். டாப் 3 பெரிய தொகுதிகள் இங்கே...

1. சோழிங்கநல்லூர்:
ஆண் வாக்காளர்கள்: 1,73,834
பெண் வாக்காளர்கள்: 1,66,781
மொத்த வாக்காளர்கள்: 3,40,615

2. கவுண்டம்பாளையம்:
ஆண் வாக்காளர்கள்: 1,47,113
பெண் வாக்காளர்கள்: 1,42,799
மொத்த வாக்காளர்கள்: 2,89,912

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

எரிக்கப்பட்ட கலைஞர் டி.வி. ஆவணங்கள்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 20) வெளியிட்ட அறிக்கை:

கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர்கொள்வதில் எந்த அளவுக்கு சாமார்த்தியமாக, விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.

சனி, 19 பிப்ரவரி, 2011

2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்!

கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளின் சார்பில் 472 வேட்பாளர்களும் மாநிலக் கட்சிகள் சார்பில் 386 வேட்பாளர்களும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பில் 307 வேட்பாளர்களும் சுயேட்சைகள் 1,222 பேரும் போட்டியிட்டனர். மொத்தமாக 2,586 வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள்.

2006 தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த 48 பேரில் ஏற்கனவே எம்.எல்.ஏ.களாக இருந்த 18 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தேர்தலில் 34 பேர் மட்டுமே வெற்றி பெற்றார்கள்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், வள்ளல் பெருமான், பாரமலை போன்றவர்கள் தோல்வி அடைந்தார்கள். காங்கிரஸ் சட்டமன்ற் கட்சித் தலைவர் சுதர்சனம், போளூர் வரதன் ஆகிய இரண்டு எம்.எல்.ஏ.களும் இறந்துவிட்டனர். இடைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியையும் சேர்த்து தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்.எல்.ஏ.கள் இருக்கிறார்கள்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: சி.பி.ஐ. வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

வேட்பாளர்கள் விவரம்:

1. திருத்துறைப்பூண்டி:  உலகநாதன்
2. நன்னிலம்: பத்மாவதி
3. மன்னார்குடி: சிவபுண்ணியம்
4. கோவில்பட்டி: ராஜேந்திரன்
5. அவிநாசி (தனி): ஆறுமுகம்
6. ஆலங்குடி: ராஜசேகரன்
7. தளி: நாகராஜன்
8. பெருந்துறை: பெரியசாமி
9. ஸ்ரீவில்லிபுத்தூர்: ராமசாமி

கே.வி.குப்பம் தொகுதியில் செ.கு.தமிழரசன் போட்டி?

தொகுதி மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி கே.வி.குப்பம். தனித் தொகுதியான இந்த தொகுதியில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளும் கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளும் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 ஊராட்சிகளும் இணைத்து 73 ஊராட்சிகள் கொண்டிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ராஜ்யசபா

கோபாலபுரத்தில் இன்று (பிப்ரவரி 18) காலை முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த சந்திப்பின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, டி.ஆர். பாலு, துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். கூட்டணியில் சேர்வது தொடர்பாக பா.ம.க.வுக்கு தி.மு.க.வுக்கு இடையே உரசல்கள் இருந்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. கூட்டணியில் பா.ம.க.வை சேர்த்துக் கொள்ள தி.மு.க. முடிவு செய்தது. இது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறதாம். கடந்த 2006 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் வழங்கப்பட்டன. இப்போது அதே 31 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு ராஜ்ய சபா இடமும் அளிக்கப்பட்டுள்ளது என்று ராமதாஸுடன் சென்றவர்கள் குறிப்பிட்டார்கள்

கருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்

கருணாநிதியை அவருடைய கோபாலபுரம் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 18) காலை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்தார். அவருடன் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் வந்திருந்தார். சந்திப்பின் போது கருணாநிதிக்கு ராமதாஸ் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தார். பதிலுக்கு ராமதாஸுக்கு கருணாநிதியும் சால்வை போட்டார். அப்போது டி.ஆர். பாலுவும் துரைமுருகனும் உடன் இருந்தனர். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் கொஞ்ச நேரம் அங்கே இருந்தார்.

ஜாதகத்தின் விதியை மாற்றவே கனிமொழி கைது நாடகம்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 17) வெளியிட்ட அறிக்கை:

கருணாநிதியின் மகள் கனிமொழி 16.2.2011 அன்று காலையில் “கைது” செய்யப்பட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் பதுக்கப்பட்டதில் கனிமொழிக்கு பங்கு உள்ளதாக கூறப்படுவது குறித்து மத்திய புலனாய்வுத் துறையால் கனிமொழி கைது செய்யப்படவில்லை. தனது தந்தையான கருணாநிதியின் காவல் படையால் கைது செய்யப்பட்டார் கனிமொழி. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிலையை வெளிப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு “மறியல்” செய்த காரணத்திற்காக கனிமொழி கைது செய்யப்பட்டார்.

வியாழன், 17 பிப்ரவரி, 2011

மூ.மு.க.வுக்கு ஒரு தொகுதி: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது அகில‌ இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம். அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் இன்று (பிப்ரவரி 17) போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவை தமது கட்சியின் நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.

2006 தேர்தல்: அ.தி.மு.க. பிரச்சாரத்தில் சிவனாண்டி!


இப்போது உளவுத்துறையில் இருக்கும் ஜாபர் சேட் மீது விமர்சனங்கள் எழுந்திருப்பது போல கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி மீது ஏகப்பட்ட புகார்கள். 2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு கட்சிகளை இழுத்து வர ரொம்பவே உழைத்தார். அதோடு தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கெடுத்துக் கொண்டார். ஜெயலலிதா பிரச்சாரம் போன இடங்களில் எல்லாம் சிவனாண்டியும் தவறாமல் ஆஜர் ஆனார்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: கருணாநிதி

''ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் உற்றார், உறவினர் , நெருங்கிய சொந்தக்காரர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் என்ன நடக்கிறது?. குறைந்த விலைக்கு மட்டமான சரக்குகளை வைத்து, உயர்ந்த சரக்கின் லேபிள் ஒட்டிஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றனர். மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்று மன்னார்குடி கும்பலுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தடுத்தாலே இலவச கலர் டிவி பெட்டிகளை வாங்குவதற்கு நிச்சயமாக பணம் கிடைக்கும்.

புதன், 16 பிப்ரவரி, 2011

பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்!

த‌மிழ‌க‌த்தின் 234 தொகுதிகளில் 2 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 295 ஆண் வாக்காளர்களும் 2 கோடியே 28 லட்சத்து 63 ஆயிரத்து 481 பெண் வாக்காளர்களும் 844 திருநங்கைகளும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 4 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 620 வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர். 234 தொகுதிகளில் 93 தொகுதிகளில் மட்டும் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அதன் விவரம் மாவட்ட வாரியாக இங்கே...

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: சீதாராம் யெச்சூரி

''கடந்த 5 வருடமாக தமிழகத்தில் என்ன நடந்தது? சட்டசபையில் ஜனநாயகத்துக்கே இடமில்லாமல் போனது. அரசு ஊழியர்களை கூண்டோடு சிறையில் போட்டார்கள். கல்வியையும் சுகாதாரத்தையும் தனியாரிடம் தாரை வார்த்துவிட்டார்கள். 500க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளை மூடிவிட்டார் ஜெயலலிதா. பிக்பாக்கெட் அடிப்பது மாதிரி மக்களுக்குத் தரப்பட்ட பல சலுகைளைப் பறித்துக் கொண்டார் ஜெயலலிதா. அந்த பிக்பாக்கெட்டுக்கு கூட்டாளியாக சேர்ந்திருக்கிறார் வைகோ. ஜெயலலிதா அரசை பாஸிஸ ஆட்சி என்று சொன்னவர் வைகோ. நாங்கள் கூட அப்படிச் சொல்லவில்லை. ஜெயலலிதாவைத் தோற்கடிப்பது ஏதேச்சதிகாரத்தை தோற்கடிப்பது மாதிரி. அதைச் செய்து காட்டுங்கள்'' -  ‍கடந்த 2006 தேர்தலில் ஏப்ரல் 5, 2006 அன்று சென்னை சைதாப்பேட்டை பிரச்சார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி பேசியது.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

புதிய தமிழகம், குடியரசு கட்சி தொகுதி பங்கீடு படங்கள்!


அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு இடமும், புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் இரண்டு கட்சிகளும் கையெழுத்திட்டுள்ளன.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமியுடன் நிர்வாகிகள்


குடியரசு கட்சி செ.கு.தமிழரசுடன் நிர்வாகிகள்

புதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுதி பங்கீடு அறிவிப்பு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 15) மாலை இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், இந்திய குடியரசு கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.

தமிழகத்தின் சிறிய‌ தொகுதிகள்!


கருணாநிதி வெற்றி பெற்ற சேப்பாக்கம் தொகுதிதான் 2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மிக சிறிய தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் சேப்பாக்கம் தொகுதிக்கு அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி நீக்கப்பட்டு சேப்பாக்கம் தொகுதியோடு இணைக்கப்பட்டன. இதனால் இப்போது சேப்பாக்கம் -  ‍ திருவல்லிக்கேணி என்று புதிய தொகுதி உருவானது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிக சிறிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது சேப்பாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன‌. அதன்படி தமிழகத்தில் குறைந்த‌ வாக்காளர்கள் கொண்ட மிக சிறிய தொகுதி நாகை மாவட்டத்தில் இருக்கும் கீழ்வெள்ளூர் (தனி) தொகுதிதான்.

தமிழகத்தின் பெரிய தொகுதிகள்!

2006 சட்டசபைத் தேர்தல் வரையில் தமிழகத்தில் மட்டுமல்ல ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகுதியாக இருந்தது வில்லிவாக்கம் தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு சில தொகுதிகள் நீக்கப்பட்டு புதிய தொகுதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. தொகுதி சீரமைப்புக்கு பிறகு முதல் சட்டசபைத் தேர்தல் இப்போதுதான் நடக்க போகிறது. இந்தநிலையில் மிகப் பெரிய தொகுதி என்கிற அந்தஸ்த்தை இழந்திருக்கிறது வில்லிவாக்கம் தொகுதி. வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் முடிந்து ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன‌. அதன்படி தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட பெரிய தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சோழிங்கநல்லூர்தான்.

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: அன்புமணி

''2001ம் ஆண்டில் ஜெயலலிதாவிடம் 27 தொகுதிகளைக் கேட்டோம். ஆனால், நாம் கேட்டதில் 8 மட்டுமே தந்த ஜெயலலிதா மிச்ச தொகுதிகளை தன் மனம் போல கொடுத்தார். ஆனால், இந்த முறை கருணாநிதிடம் 31 கேட்டோம். அதில் 29யை நாம் கேட்ட தொகுதிகளாகவே தந்தார்.கேட்டதைத் தந்தவர் கலைஞர். சொல்வதைச் செய்பவரும் அவரே.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

தமிழக எம்.எல்.ஏ.களின் பட்டியல்!

2006 சட்டசபைத் தேர்தலில் வென்றவர்கள் விவரம் மாவட்ட வாரியாக இங்கே....

சென்னை மாவட்டம்
1. பேராசிரியர் க. அன்பழகன் (தி.மு.க.): துறைமுகம்
2. வி.எஸ். பாபு (தி.மு.க.): புரசைவாக்கம்
3. பரிதி இளம்வழுதி (தி.மு.க.): எழும்பூர்
4. ஆற்காடு வீராசாமி (தி.மு.க.): அண்ணா நகர்
5. மு.க. ஸ்டாலின் (தி.மு.க.): ஆயிரம்விளக்கு
6. கருணாநிதி (தி.மு.க.): சேப்பாக்கம்
7. டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.): ராயபுரம்
8. பி.கே. சேகர் பாபு (அ.தி.மு.க.): ராதாகிருஷ்ணன் நகர் *
9. கு. சீனிவாசன் (அ.தி.மு.க.): பூங்கா நகர்
10. கலைராஜன் (அ.தி.மு.க.): தியாகராய நகர்
11. பதர் சையீத் (அ.தி.மு.க.): திருவல்லிக்கேணி
12. எஸ். வி. சேகர் (அ.தி.மு.க.): மைலாப்பூர் *
13. செந்தமிழன் (அ.தி.மு.க.): சைதாப்பேட்டை
14. எஸ்.கே. மகேந்திரன் (சி.பி.எம்): பெரம்பூர்

புதன், 9 பிப்ரவரி, 2011

கருணாநிதியின் தங்க கிரீடம் 55 லட்சத்துக்கு ஏலம் போனது!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் சிலையை முதல்வர் கருணாநிதி இன்று (பிப்ரவரி 9) திறந்து வைத்தார். மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கருணாநிதி தங்க கிரிடமும் தங்க வாளும் பரிசளிக்கப்பட்டது. அதனை சிலை திறப்பு விழாவில் கருணாநிதி முன்பு ஏலம் விட்டார்கள். காமராஜ் என்பவர் அதை 55 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். இந்த தொகையை ம.பொ.சி.யின் குடும்பத்தினருக்கு வழங்க போகிறார்கள்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சுப்பிரமணியன் சுவாமிக்கு சட்டசபையில் கருணாநிதி விளக்கம்

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் அரசு விரும்புரிமை கோட்டாவில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று சொல்லி கவர்னர் மாளிகையில் புகார் கொடுத்தார் சுப்பிரமணியன் சுவாமி. முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டிருந்தார் சுவாமி.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் இதுபற்றி விளக்கம் கொடுத்திருக்கிறது தமிழக அரசு. சட்டசபையில் இன்று (பிப்ரவரி 8) சட்டப் பேரவை விதி 110இன் கீழ் முதலமைச்சர் கருணாநிதி படித்த அறிக்கை:

திங்கள், 7 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதேபோல புதுவையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள்1. விருத்தாசலம்: ஆர்.கிருஷ்ணமூர்த்தி
2. குன்னம்: பி.ஜெயசீலன்
3. அரியலூர்: சி.பாஸ்கர்
4. லால்குடி: டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து
5. நெல்லை: எஸ்.மதன்

2006 தேர்தல்: வி.சி. போட்டியிட்ட தொகுதிகள்!

 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 7 தனித் தொகுதிகள். 2 பொதுத் தொகுதிகள். அந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோவில் மணி சின்னத்தில் போட்டியிட்டது. 2001 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். 2006ல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று விரும்பி தனியாக ‘கோவில் மணி’ சின்னத்தில் போட்டியிட்டது.சனி, 5 பிப்ரவரி, 2011

ஸ்டாலின் ஊக்கை விழுங்கி விட்டான்: கருணாநிதி

சென்னை பெரம்பூர் லோக்கோ ஓர்க்ஸ் கூடுதல் மேம்பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை:

இந்த விழா நிகழ்ச்சியில் பாலத்தின் அருமையையும், பாலங்களுடைய வரலாறுகளையும் எனக்கு முன்னால் பேசிய நம்முடைய துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலின் அவர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தம்பி தயாநிதி மாறன் அவர்களும், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் அவர்களும் மிக விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.


''பட்ஜெட் நிதி எந்த ‘நிதி’ களின் கைகளுக்கு செல்லப் போகிறதோ?'': ஜெயலலிதா


தமிழக அரசின் பட்ஜெட் தொடர்பாக ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 5) வெளியிட்ட அறிக்கை:

இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள் இல்லாத ஒரு வெத்து வேட்டு அறிக்கையாக அமைந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக, அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவிற்கு முற்றிலும் எதிராக, ராகு காலத்தை மனதில் வைத்து, கேள்வி நேரத்தை புகுத்தி, அதற்குப் பிறகு காலை 10.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பது, கருணாநிதியின் “பகுத்தறிவிற்கு” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

ம.ம.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவுடன் சந்திப்பு

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் தொகுதி பங்கீடு குழு சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவில் இடம் பெற்றிருக்கும் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்

தேர்தலில் எப்படியாவது போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் கனவில் கரை வேட்டி கட்டியவர்கள்தான் அதிகம். 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வில் எதிர்பார்த்த பலருக்கு ஸீட் கிடைக்கவில்லை. சில தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

தொகுதி பங்கீடு: ம.தி.மு.க. பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க.வோடு பேச்சுவார்த்தை நடத்தியது. அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர், இன்று (பிப்ரவரி 4) மாலை, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. மாரியப்பன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் க. சோமு, தலைமை நிலையச் செயலாளர் தாயகம் குருநாதன் ஆகியோருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கருணாநிதி ஆட்சி வீழ்ச்சி அடையும்: ஜெயலலிதா அறிக்கை

ஜெயலலிதா இன்று (பிப்ரவரி 4) வெளியிட்ட் அறிக்கை:

கேரள மாநிலம் வல்லார்படத்தில் சர்வதேச பெட்டக மாற்று முனையத்தை அமைக்க அனுமதி கொடுத்ததன் மூலம் தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார் கருணாநிதி.

செல்போன் கட்டணத்தை குறைத்து சாதனை படைத்தவர் ராசா: கருணாநிதி பேச்சு


தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுத் தீர்மானங்கள் விளக்கப் பொதுக் கூட்டம் சென்னையில் நடந்து. அதில் முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அதன் விவரம்:

தென்சென்னையிலே இவ்வளவு கோலாகலமாக இத்தகைய எழுச்சியோடு இந்தக் கூட்டம் நடைபெறுவதற்கு என்ன காரணம் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன்.  “அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்” என்று கிராமப்புறங்களிலே ஒரு பழமொழி உண்டு.  அதைப்போலத்தான் தம்பி அன்பழகனை அடிமேல் அடி அடித்து இந்த அம்மியை நகரச்செய்திருக்கிறேன் என்றுதான் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் “அம்மி” நகர்ந்ததுமாத்திரம் அல்ல, நமக்கு முன்னால் அது “கும்மி”யும் அடிப்பதைப்போல் மகத்தான விழாவாக இந்த விழாவை அவரும், நண்பர்களும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

வியாழன், 3 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார்டன்!


2006 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதற்கு சில காலம் வரையில் காங்கிரஸில் செல்வாக்கான தலைவராக இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. அப்போது காங்கிரஸுக்குள்ளேயே இருந்து கொண்டு ஜெயா புகழாராம் பாடிக் கொண்டிருந்தார். வன்னியர்களுக்கு காங்கிரஸில் மரியாதை இல்லை என்று புது குண்டு போட்டு சத்தியமூர்த்தி பவனில் இருந்து விலகினார் ராமமூர்த்தி. பிறகு போயஸ் கார்டனில் ஐக்கியமானார். அங்கே அவருக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை கிடைத்தது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் திண்டிவனத்தாரின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.

2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.!


2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் கடலோர மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்ட சமயத்தில் மீனவர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பு இருந்ததாக பேச்சு எழுந்தது. கடலோர மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றியை குவித்ததால் அந்த எதிர்ப்பு வலுவிழந்தது.

2006 தேர்தல்: கட்சிவாரியாக வென்ற பெண் எம்.எல்.ஏ.கள்!


தி.மு.க. எம்.எல்.ஏ.கள்:
1. அச்சரப்பாக்கம்:& சங்கரி நாராயணன்
2. சங்கராபுரம்: அங்கயற்கண்ணி
3. தாராபுரம்: பிரபாவதி
4. சமயநல்லூர்: தமிழரசி
5. தூத்துக்குடி: கீதா ஜீவன்
6. ஆலங்குளம்: பூங்கோதை
7. உப்பிலியாபுரம்: ராணி

புதன், 2 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: பேராசிரியர் அன்பழகன் ‘பரிதாப’ வெற்றி!

2006 சட்டசபைத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் அன்பழகன் வெறும் 410 ஓட்டுகள் வித்தியாசத்தில் ‘பரிதாப வெற்றி’ பெற்றார். அன்பழகன் வாங்கிய ஓட்டுகள் 26 ஆயிரத்து 545. அன்பழகனை எதிர்த்துப் போட்டியிட்ட ம.தி.மு.க.வேட்பாளர் சீமா பஷீர் 26 ஆயிரத்து 135 ஓட்டுகள் பெற்றார்.

சட்டசபையில் 22 பெண்கள்!

2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 22 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் தலா ஏழு பெண் எம்.எல்.ஏ.களும் காங்கிரஸ், சி.பி.எம். கட்சிகளில் இருந்து தலா மூன்று பெண் எம்.எல்.ஏ.களும் சி.பி.ஐ., பா.ம.க. கட்சிகளில் தலா ஒரு பெண் எம்.எல்.ஏ.களும் வெற்றி பெற்றார்கள்.

தொகுதி பங்கீடு: புதிய தமிழகம், மூ.மு.க. பேச்சுவார்த்தை


தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்துடன் தொகுதிப் பங்கீடு குறித்து, அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் இன்று (பிப்ரவரி 1 செவ்வாய்) மாலை 6.00 மணியளவில், அ.தி.மு.க. தலைமைக் அலுவலகத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் இசக்கிமுத்து ஆகியோருடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

கூட்டணியில் பா.ம.க. விலகல்: சென்னை திரும்பிய கருணாநிதி பேட்டி

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாகவும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவும் டெல்லி போன முதல்வர் கருணாநிதி இன்று (பிப்ரவரி 1) சென்னை திரும்பினார். அதன்பிறகு அறிவாலயத்தில் கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம்:

கேள்வி: உங்கள் டெல்லிப் பயணம் எப்படி அமைந்தது?

பதில்: வானம் நிர்மலமாக இருந்தது - வழியில் தடைகள் எதுவும் இல்லை - பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.

2006 தேர்தல்: 163 இடங்களில் வென்ற தி.மு.க. கூட்டணி!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தி.மு.க. 96 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் பா.ம.க. 18 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி 9 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும் 96 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும் கட்சியாக விளங்கியது.

கூட்டணிக்கு குழு அமைக்கப்படுகிறது: கருணாநிதி பேட்டி

உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று (ஜனவரி 30) டெல்லி சென்றார். அங்கே பத்திரிகையாளர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்த போது வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அணியில் பா.ம.க. இடம் பெறும் என்று கருணாநிதி தெரிவித்தார். இந்த நிலையில் திங்கள் கிழமை காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.