வியாழன், 24 பிப்ரவரி, 2011

பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 சீட்: ஜெயலலிதா அறிவிப்பு

ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 23) அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலாளரும், மேற்கு வங்க மாநிலத்தின் வேளாண்மைத் துறை அமைச்சருமான ந‌ரேந்திரநாத் டே, தேசிய செயலாளரும், மாநில தேர்தல் பார்வையாளருமான ஜி. தேவராஜன், தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஞ.ஏ. கதிரவன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.எஸ். ஜெயராமன், எம். ராஜசேகர், தமிழ் மாநில நிதிச் செயலாளர் ஆர். மாயத்தேவர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது, நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.

கருத்துகள் இல்லை: