புதன், 23 பிப்ரவரி, 2011

அ.தி.மு.க. விருப்ப மனு: 12.14 கோடி வசூல்

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை பிப்ரவரி 5 முதல் 23ம் தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி 23ம் தேதி வரை 12,268 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஜெயலலிதா தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 1,503 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கட்சிக்காரர்கள் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 10,553 மனுக்களும் புதுச்சேரியில் 181 மனுக்களும் கேரள மாநிலத்தில் 31 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 12,268 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மூலம் வேட்பு மனுக் கட்டணமாக 12 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: