செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

புதிய தமிழகம் 2, குடியரசு கட்சி 1 அ.தி.மு.க. தொகுதி பங்கீடு அறிவிப்பு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (பிப்ரவரி 15) மாலை இந்திய குடியரசு கட்சியின் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், இந்திய குடியரசு கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.

இதேப் போல புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது, நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், புதிய தமிழகம் கட்சி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனது.

இந்நிகழ்வின் போது, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ., ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை: