சனி, 5 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: தி.மு.க. அதிருப்தியாளர்கள்

தேர்தலில் எப்படியாவது போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் கனவில் கரை வேட்டி கட்டியவர்கள்தான் அதிகம். 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வில் எதிர்பார்த்த பலருக்கு ஸீட் கிடைக்கவில்லை. சில தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

* திருவிடைமருதூர், முகையூர் ஆகிய தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் அங்கே தி.மு.க.வினர் கொந்தளித்தனர்.

* கும்மிடிப்பூண்டி, திருப்போரூர் தொகுதிகளளும் பா.ம.க.வுக்குஒதுக்கப்பட்டது. கோபம் அடைந்த தி.மு.க.வினர் தி.மு.க. கொடிகள், பேனர்களை கிழித்தெறிந்தனர்.

* முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜேந்திரன் ஆகியோருக்கு சீட் கொடுத்தற்கும் எதிர்ப்பு கிளம்பிய‌து. வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட திருமலைகிரி ஊராட்சி தி.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். விட்டனர்.

* திருச்சி மருங்காபுரி வேட்பாளர் கவிஞர் சல்மா, திருமங்கலம் தொகுதி வேட்பாளர் தளபதி, இளையாங்குடி தொகுதி வேட்பாளர் ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கும் எதிர்ப்புகள் கிளம்பின‌.

கருத்துகள் இல்லை: