திங்கள், 7 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர்கள்!

2006 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு 9 தொகுதிகள் வழங்கப்பட்டன. அதேபோல புதுவையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

1. ஸ்ரீபெரும்புதூர்: இளமாறன்
2. முகையூர்: - சிந்தனைச் செல்வன்
3. செங்கம் (தனி): - ஆற்றலரசு
4. உளுந்தூர்பேட்டை (தனி): - வெற்றிச் செல்வன்
5. காட்டு மன்னார்கோவில் (தனி): -எழுத்தாளர் ரவிக்குமார்
6. மங்களூர் (தனி): - செல்வப் பெருந்தகை
7. அரூர் (தனி): - கோவிந்தசாமி
8. வால்பாறை (தனி): - சுசி கலையரசன்
9. சீர்காழி (தனி): - துரைராஜன்
 ரவிக்குமார்

செல்வப் பெருந்தகை

இதில் காட்டு மன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட எழுத்தாளர் ரவிக்குமார், மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட செல்வப் பெருந்தகை ஆகிய இருவர் மட்டுமே வெற்றி பெற்றார்கள். சில ஆண்டுகளிலேயே செல்வ பெருந்தகை பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவினார். பிறகு அங்கிருந்து காங்கிரஸுக்கு போனார். ஆனால் எம்.எல்.ஏ. பதவியை மட்டும் விடவில்லை. 'பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்' என்று செல்வ பெருந்தகை சொல்லிக்கொண்டிருக்க.. சபாநாயகர் ஆவுடையப்பனோ 'அவர் ராஜினாமா கடிதம் ஒழுங்காக இல்லை. வேறு கட்சியில் சேர்ந்ததற்கு ஆதாரம் இல்லை' என்றெல்லாம் சொல்லி இருவரும் அரசியல் கேலிக்கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: