சனி, 19 பிப்ரவரி, 2011

2006 தேர்தலில் களத்தில் நின்ற கட்சிகள்!

கடந்த 2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசியக் கட்சிகளின் சார்பில் 472 வேட்பாளர்களும் மாநிலக் கட்சிகள் சார்பில் 386 வேட்பாளர்களும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பில் 307 வேட்பாளர்களும் சுயேட்சைகள் 1,222 பேரும் போட்டியிட்டனர். மொத்தமாக 2,586 வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள்.

களத்தில் நின்ற கட்சிகளும் போட்டியிட்ட வேட்பாளர்களும்

தேசியக் கட்சிகள்:
1. பாரதிய ஜனதா 225
2. பகுஜன் சமாஜ் 164
3. இந்திய கம்யூனிஸ்ட் 10
4. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் 13
5. காங்கிரஸ் 48
6. தேசியவாத காங்கிரஸ் 12

மாநிலக் கட்சிகள்:
1. அ.தி.மு.க. 188
2. தி.மு.க. 132
3. ம.தி.மு.க. 35
4. பா.ம.க. 31

பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள்:
விஜயகாந்தின் தே.மு.தி.க. 232
அகில பாரத் ஹிந்து மகாசபை 11
அகில இந்திய பார்வட் பிளாக் (சுபாஸிஸ்ட்) 1
அகில இந்திய வள்ளலார் பேரவை 2
பாரதிய திராவிட மக்கள் கட்சி 3
இந்தியன் ஜஸ்டிஸ் கட்சி 4
இந்தியன் வெற்றி கட்சி 1
ஜபமணி ஜனதா 2
ஜனதா கட்சி 5
லோக் பரித்ரன் 7
புதிய நீதி கட்சி 4
சக்தி பாரத தேசம் 2
தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் 18
தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் 1
யுனைடெட் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 3
விவசாயி அன்பு கட்சி 2
விடுதலை சிறுத்தைகள் கட்சி 9

சுயேட்சைகள் 1,222

கருத்துகள் இல்லை: