வியாழன், 3 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: திண்டிவனத்தாரை கழற்றிவிட்ட போயஸ் கார்டன்!


2006 சட்டசபைத் தேர்தல் நெருங்குவதற்கு சில காலம் வரையில் காங்கிரஸில் செல்வாக்கான தலைவராக இருந்தார் திண்டிவனம் ராமமூர்த்தி. அப்போது காங்கிரஸுக்குள்ளேயே இருந்து கொண்டு ஜெயா புகழாராம் பாடிக் கொண்டிருந்தார். வன்னியர்களுக்கு காங்கிரஸில் மரியாதை இல்லை என்று புது குண்டு போட்டு சத்தியமூர்த்தி பவனில் இருந்து விலகினார் ராமமூர்த்தி. பிறகு போயஸ் கார்டனில் ஐக்கியமானார். அங்கே அவருக்கு ஆரம்பத்தில் நல்ல மரியாதை கிடைத்தது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் அந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் திண்டிவனத்தாரின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது.காங்கிரஸில் இருந்து விலகி தமிழகஇந்திரா காங்கிரஸ் என்ற புதுக்கட்சி கண்டு அ.தி.மு.க. கூட்டணியிலும் இணைந்தார். ஆனால் அவர் கட்சிக்கு ஜெயலலிதா ஒரு ஸீட் கூட தரவில்லை. வெறுத்துப் போய் அங்கிருந்து வெளியேறினார். கட்சியின் பெயரையும் தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ் என்று மாற்றினார். ஜெயலலிதா மீது இருந்த வெறுப்பை காட்ட  36 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார் ராமமூர்த்தி. அதோடு ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதிக்கும் வேட்பாளரை போட்டார்.

தேர்தலில் அவருடைய வேட்பாளர் மட்டுமல்ல கட்சியே காணாமல் போனாது. அதன்பிறகு கொஞ்ச காலத்திற்கு கட்சியை நடத்திவிட்டு பிறகு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இனணந்தார். இப்போது அந்த கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருக்கிறார். இப்போது தேர்தல் வருகிறது. தேசியவாத காங்கிரஸ் போட்டியிடுமா? திண்டிவனத்தார் இப்போதும் திணறுவாரா? பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: