வியாழன், 3 பிப்ரவரி, 2011

2006 தேர்தல்: கடலோர மாவட்டங்களில் வென்ற தி.மு.க.!


2006 தமிழக சட்டசபைத் தேர்தலில் கடலோர மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்ட சமயத்தில் மீனவர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு எதிர்ப்பு இருந்ததாக பேச்சு எழுந்தது. கடலோர மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றியை குவித்ததால் அந்த எதிர்ப்பு வலுவிழந்தது.


அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த சமயத்தில்தான் தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது. கடலோர மாவட்டங்களில் அ.தி.மு.க. அரசு தேவையான அளவிற்கு நிவாரண பணிகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சி பேதமின்றி நிவாரண நிதி வழங்கப்பட்டன. குறிப்பாக சுனாமியால் பாதிப்பு ஏற்படாத ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட கோடிக் கணக்கில் சுனாமி நிதி வழங்கப்பட்டன. இதையெல்லாம் கணக்குப் போட்டு தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மீனவர்களின் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. சேதுசமுத்திர திட்டத்திற்கு மீனவர்களிடயே இருந்த எதிர்ப்பும் சேர்ந்து கொண்டதால் எப்படியும் அ.தி.மு.க.வே வாகை சூடும் என்று நினைத்தார்கள். ஆனால் தேர்தல் முடிவு வேறு மாதிரியாக மாறிவிட்டது.

கருத்துகள் இல்லை: