சனி, 26 பிப்ரவரி, 2011

காங்கிர‌ஸ் 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து: க‌ருணாநிதி பேட்டி

அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 26) காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த தங்கபாலு, வாசன், சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தி.மு.க. குழுவில் ஸ்டாலின் டி.ஆர். பாலு, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் 70 தொகுதிகளுக்கு மேல் கேட்டு வரும் நிலையில் முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இன்று இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் என்று சில நிபந்தனைகளை காங்கிரஸ் விதிக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த பிறகு டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் விவாதிக்கப்பட்டது. அங்கேயும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இன்று நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வெளியே வந்த தங்கபாலு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. தொடர்ந்து பேசுவோம் என்று சொன்னார்.

இத‌ன் பிற‌கு க‌ருணாநிதி அளித்த‌ பேட்டி:

கேள்வி: பேச்சுவார்தை எப்ப‌டி ந‌ட‌க்கிற‌து?

ப‌தில்: பேச்சுவார்த்தை மூன்றாவ‌து க‌ட்ட‌த்திற்கு முன்னேறி இருக்கிற‌து.

கேள்வி: காங்கிர‌ஸ் எத்த‌னை தொகுதிக‌ள் கேட்கிற‌து

ப‌தில்: 234 தொகுதிக‌ள் கேட்கிற‌து (சிரிக்கிறார்)

கேள்வி: ஆட்சியில் காங்கிர‌ஸ் ப‌ங்கு கேட்கிற‌தா?

ப‌தில்: க‌ற்ப‌னையான‌ செய்தி

கேள்வி: பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்ப‌ட்டிருக்கிற‌தா?

ப‌தில்: இழுபறி எல்லாம் ஏற்ப‌ட‌வில்லை.

கேள்வி: தி.மு.க‌. சார்பில் புதிய‌ கோரிக்கைக‌ள் எதுவும் வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌தா?

ப‌தில் அது ர‌க‌சியமான‌ விஷ‌ய‌ம்.

கருத்துகள் இல்லை: