வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

உழவர் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை ஜெயலலிதா முடித்துவிட்டார். தே.மு.தி.க. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. மட்டுமே பாக்கி.

தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பா.ம.க.வுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்துவிட்டார்கள். இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 25) காலை அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசும் உடன் இருந்தார். தி.மு.க. சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். உழவர் உழைப்பாளர் கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில்தான் அந்த கட்சி போட்டியிடுமாம்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

flash news potta innum nallaa irukkum.

azifair-sirkali.blogspot.com

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

Is the Sun is gonna rise again? Lets see...!