செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: ராமதாஸ்

''இன்னும் ஒரே தடவை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருண்டு போய்விடும். அவர் ஒரு நடிகைதான், ஆனால் அரசியலில் நடிக்கக் கூடாது. ஜெயலலிதாவின் ஒரே சாதனை ஆண்டுக்கு ரூ. 24,000 கோடிக்கு மது விற்றதும் பல லட்சம்பேரை குடிக்கு அடிமையாக்கியதும்தான். சசிகலாவின் பினாமிகள் பிழைப்பதற்காக அரசே மதுக் கடைகளை எடுத்து நடத்தி, மக்களை குடிக்கு அடிமையாக்கியுள்ளது. தன்னை சேது சமுத்திரத் திட்ட நாயகன் என்று சொல்லிக் கொள்ளும் வைகோ, இப்போது அந்தத் திட்டத்தைஎதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார். இதற்குப் பெயர் தான் பச்சை சந்தர்ப்பவாதம்.''  2006 தேர்தலில் ராமதாஸ் முழக்கம். (2006 ஏப்ரல் 7 கும்மிடிப்பூண்டி).
2006 தேர்தல் வெற்றிக்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து ''மஞ்சள் திரவ மது புரட்சிதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது.'' என்று தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார் ராமதாஸ். அப்போது முட்டிக் கொண்டவர்கள் இப்போது கோபாலபுரத்தில் ஒட்டிக் கொள்கிறார்கள். ராமதாஸ் பாஷையில் சொல்வது என்றால் இதுதான் பச்சை சந்தர்ப்பவாதமா?

கருத்துகள் இல்லை: