திங்கள், 28 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: செங்கோட்டையன்


''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாக சொன்னதை, தன்னைத்தான் சொன்னார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். அ.தி.மு.க.வை தனது அரசின் சாதனைகளால் உலகம் முழுவதும் அறியும் வகையில், அடையாளம் காட்டிஎம்.ஜி.ஆருக்குப் புகழ் சேர்த்தவர் ஜெயலலிதா. இவையெல்லாம் நேற்று கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்குதெரியாமல் இருப்பதில் வியப்பே இல்லை. எம்.ஜி.ஆரின் ரசிகன் என கூறிக் கொள்ளும் விஜயகாந்த், சோதனைக் கட்டத்தின் போது எங்கிருந்தார்?அ.தி.மு.க.வின் வரலாறு தெரியாமல் அவர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவைக் குறை சொல்ல விஜயகாந்த்துக்கு எந்த தகுதியும் இல்லை. வரலாறுகளை எல்லாம் இனிமேலாவது அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்''  ‍குடிக்காரன் அறிக்கை தொடர்பாக விஜயகாந்துக்கு செங்கோட்டையன் கொடுத்த பதிலடி அறிக்கை (2006 அக்டோபர் 25)
ஐந்தாண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் இப்போது தேர்தல் நேரம். விஜயகாந்தை அன்றைக்கு விமர்சித்து அறிக்கைவிட்ட அதே செங்கோட்டையன் இன்று அவர்களோடு கை குலுக்க ஆரம்பித்திருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் தே.,மு.தி.க. இணைந்த அன்று அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வந்த பண்ருட்டி ராமசந்திரனையும் சுதிஷையும் செங்கோட்டையன் தான் வரவேற்று அழைத்து சென்றார். என்ன சொல்வார்கள் வழக்கமாக அரசியல்வாதிகள் சொல்வதுதானே. ''அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை"

1 கருத்து:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இதெல்லாம் அரசியல்ல சாதரணம் தலைவரே