புதன், 23 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்:அன்புமணி

''மக்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த நிலங்களை சிறப்பு பொருளாதர மண்டலம் என்ற பெயரில் பறித்து, தொழிற்சாலைகள் அமைத்துள்ளனர். ஆனால், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மின்வெட்டு பிரச்னையால் தமிழ்நாட்டில் உள்ள 80 சதவிகிதம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின் வெட்டால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்படைந்திருக்கிறது.'' - 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி முழக்கம். (2009 மே 6 இருங்காட்டுக்கோட்டை மேவலூர்குப்பம் பிரச்சாரம்).2009 நாடாளுமன்ற‌த் தேர்த‌லில் அ.தி.மு.க‌. கூட்ட‌ணியில் அங்க‌ம் வ‌கித்த‌து பா.ம‌.க‌. அத‌னால் அப்போது த‌மிழ‌க‌த்தில் இருந்து மின்வெட்டை க‌ண்டித்து பேசிய‌ தைரிய‌சாலி அன்பும‌ணி, இப்போது தி.மு.க‌. கூட்ட‌ணிக்கு வ‌ந்திருக்கிறார். இப்போதும் த‌மிழ‌க‌த்தில் மின்வெட்டு இருக்கிற‌து. அன்பும‌ணி ஆன் ஆவாரா? ஆஃப் ஆவாரா?

கருத்துகள் இல்லை: