வியாழன், 17 பிப்ரவரி, 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: கருணாநிதி

''ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சகிகலாவின் உற்றார், உறவினர் , நெருங்கிய சொந்தக்காரர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் என்ன நடக்கிறது?. குறைந்த விலைக்கு மட்டமான சரக்குகளை வைத்து, உயர்ந்த சரக்கின் லேபிள் ஒட்டிஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிக்கின்றனர். மது விற்பனையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இன்று மன்னார்குடி கும்பலுக்கு போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தடுத்தாலே இலவச கலர் டிவி பெட்டிகளை வாங்குவதற்கு நிச்சயமாக பணம் கிடைக்கும்.


தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 156 லட்சம். இதில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 53 லட்சம். 2 ஆண்டு காலத்தில் தொலைகாட்சி பெட்டிகள் அனைத்தையும் கொடுத்து விடலாம். 53 லட்சம் தொலைகாட்சி பெட்டிகள் ரூ. 2,000 செலவில் வழங்க ரூ. 1,600 கோடிதான் ஆகும்.''  -  ‍கடந்த தேர்தலில் ஏப்ரல் 6, 2006 அன்று சென்னை புரசைவாக்கம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருணாநிதி முழங்கியது.

ஜெயலலிதாவின் உறவினர்கள் நடத்தும் மிடாஸ் மது ஆலையை பற்றி சொன்ன கருணாநிதி ஆட்சியில்தான் அவருக்கு வேண்டப்பட்ட கலைஞர் டி.வி. சரத்குமார் என்று பலருக்கு மது தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல.

1 கருத்து:

ரங்குடு சொன்னது…

என்னத்த சொல்றதப்பு.
1.75 லட்சம் கோடி இருந்தால் இந்தியாவில் எல்லோருக்கும் கலர் டி.வி, கேஸ் அடுப்பு, 2 ஏகர் நிலம் வழங்கலாம்.

கலைஞருக்கு யாராவது எடுத்துச் சொல்லக்கூடாதா?