வியாழன், 17 மார்ச், 2011

தொகுதி ஒதுக்கீடு: சி.பி.எம். கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:


இன்று (16.3.2011) மாலை அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யவேண்டிய 12 தொகுதிகள் பற்றி ஏற்கனவே அளிக்கப்பட்ட பட்டியலின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றதொகுதிகளை ஒதுக்கீடு செய்வதோடு மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று வலியுறுத்தினோம்.
 
எங்கள் பொதுச் செயலாளரை சந்தித்து கலந்து ஆலோசித்துவிட்டு இன்று இரவே சி.பி.எம். அலுவலகத்திற்கு வந்து சி.பி.எம். பேச்சுவார்த்தைக் குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதாக அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர்கள் கூறினார்கள். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அ.தி.மு.க. போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006ல் வெற்றிபெற்ற 6 தொகுதிகளுக்கும், மேலும் சி.பி.எம். போட்டியிட விரும்பி அளித்துள்ள பட்டியலில் உள்ள பல தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க இயலாது.
 
பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிற போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரும் தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறையல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதோடு அ.தி.மு.க. அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.


ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக நாளை (17.3.2011) சென்னையில், கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விவரம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஜெயலலிதா 18.3.2011 முதல் 10.4.2011 வரை அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம்

செவ்வாய், 15 மார்ச், 2011

முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம்
1. துறைமுகம்

2. வானியம்பாடி

த‌ற்போது முஸ்லிம் லீக் க‌ட்சிக்கு வானிய‌ம்பாடி தொகுதியில் அப்துல் பாசித், அற‌வாக்குறிச்சி தொகுதியில் க‌லிலூர் ர‌ஹ்மான் என்று இர‌ண்டு எம்.எல்.ஏ.க‌ள் இருக்கிறார்க‌ள். இதில் வானியம்பாடி மட்டும் தற்போது கிடைத்திருக்கிறது. துறைமுகம் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன்தான். கடந்த தேர்தலிலேயே அவர் 300 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேசி வந்தார்கள். இந்தநிலையில் இன்று (மார்ச் 15) இரவு தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திருமாவளவனும் கருணாநிதியும் கையெழுத்திட்டுள்ளனர்.

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்று (மார்ச் 15) இரவு அறிவாலயத்திற்கு ராமதாஸ் வந்து தொகுதிகளை இறுதி செய்தார். ஒப்பந்தத்தில் ராமதாஸும் கருணாநிதியும் கையெழுத்திட்டனர்.

பா.ம.க்.போட்டியிடும் தொகுதிகள் விவரம்:

2006 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் நிலை!

2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 48 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். 34 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நிலைமை எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கடந்த தேர்தல் நிலவரம் இங்கே..

புதன், 9 மார்ச், 2011

பா.ம.க., முஸ்லிம் லீக் கட்சிகள் தொகுதிகளை விட்டு கொடுத்திருக்கிறது: கருணாநிதி

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை தர முடியாது என்று மத்திய அரசில் இருந்து விலகுவதாக சொன்னது தி.மு.க. இந்த நிலையில் டெல்லியில் ஏற்பட்ட சமாதானத்திற்கு பிறகு 63 தொகுதிகளை தர சம்மதித்திருக்கிறது தி.மு.க. அறிவாலயத்தில் இன்று (மார்ச் 8) தே.மு.தி.க.வில் இருந்து தி.மு.க.வில் இணைந்த தொண்டர்கள் நிகழ்ச்சியில் கருணாநிதி கலத்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

செவ்வாய், 8 மார்ச், 2011

தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு

2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக இறுதி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கு இந்த முறை சீட் இல்லை. அருந்ததியர் மக்கள் கட்சி, விவசாய தொழிலாளர் கட்சி, தமிழ்மாநில தேசிய லீக், உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் இடங்கள் இல்லை.

தி.மு.க. - 121

காங்கிர‌ஸ் - 63

பா.ம.க. - 30

விடுத‌லைச் சிறுத்தைக‌ள் - 10

கொங்குநாடு முன்னேற்ற கழகம் - 7

முஸ்லிம் லீக் - 2

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - 1

மொத்த தொகுதிகள் - 234

ஞாயிறு, 6 மார்ச், 2011

கூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்டி

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் என்கிற அறிவிப்பு வந்த பிறகு இன்று (மார்ச் 6) இரவு 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய தி.மு.க. அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், நெப்போலியன் ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு முதல்வர் கருணாநிதி வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்தது. வெளியே வந்த கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தார் பேட்டி விவரம்:

தொகுதி வாரியாக வாக்காளர்கள்!

மாவட்டவாரியாக தொகுதிகளின் வாக்காளர்கள் விவரம் இங்கே...

1. திருவள்ளூர் மாவட்டம்
1. கும்மிடிபூண்டி
ஆண் வாக்காளர்கள்: 1,05,145
பெண் வாக்காளர்கள்: 1,06,492
அரவாணிகள்: 9
மொத்த வாக்காளர்கள்: 2,11,646

வேட்புமனு தாக்கல் விதிமுறைகள்!

சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது கீழ்கண்ட விதிகளை கண்டிபாக கடைபிடிக்க வேண்டும்.

* வேட்பு மனு தாக்கல் செய்யும்போது விண்ணப்பம், டெபாசிட் கட்டணம் போன்றவற்றுடன் தங்களைப் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மாவட்டங்களில் தேர்தல் புகார் செய்ய...


தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் புகார் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் விவரம் இங்கே..

கோவை மாவட்டம்
2305151, 2304949, 2305353 (24 மணி நேரம்)

திருச்சி மாவட்டம்
1800425730 ( `டோல் பிரீ`)

அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு


1. அ.தி.மு.க. -

2. தே.மு.தி.க. - 41

3. ம.தி.மு.க. -

4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) -

5. இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) -

6. மனிதநேய மக்கள் கட்சி - 3

7. புதிய தமிழகம் - 2

8. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் - 1

9. இந்திய குடியரசுக் கட்சி - 1

10. பார்வர்டு பிளாக் - 1

திருமண மண்டபம், விடுதி உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள்


*  திருமண மண்டபங்களில் முன் பதிவு விவரங்களை சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளர்கள் அவ்வப்போது தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையங்களில் தெரிவிக்க வேண்டும். இதற்கான படி வங்கள் மண்டப உரிமை யாளர்களுக்கு வழங்கப்படும்.

* அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி காது குத்து, திருமண விழா என்ற பெயரில் முன்பதிவு செய்து திருமண மண்டபங்களை பயன்படுத்துவது தெரிய வந்தால் மண்டப உரிமையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பிரச்சார விதிமுறைகள்!


* எந்த ஒரு அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும், சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கு இடையே வெறுப்பையும் துவேசத்தையும் தூண்டும் செயலில் ஈடுபடக்கூடாது.

* பிற கட்சிகளை பற்றி விமர்சிக்கும்போது அதன் முந்தைய செயல்பாடுகள், கொள்கைகள், திட்டங்கள், பணிகள் குறித்து மட்டுமே பேச வேண்டும்.

* பொது நடவடிக்கைக்கு தொடர்பில்லாத, தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவோ கூடாது.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் விதிகள்!


* சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

* அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் மற்றும் இதர பணியில் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுவதாக, புகார் வந்தால், தேர்தல் அதிகாரிகள் அதனை தீவிரமாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் அஜாக்கிரதையாக இருந்து விடக் கூடாது.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் முயற்சி மேற்கொள்ளலாம். அதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை மாவட்ட தேர்தல் அதிகாரி தினமும் கண்காணித்து தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை தர வேண்டும்.

தேர்தல் செலவுகள் விதிமுறைகள்!


* ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.16 லட்சம் வரை செலவு செய்யலாம்.

* ஒவ்வொரு வேட்பாளரும் வங்கி கணக்கு தொடங்கி, அதன் மூலம் மட்டுமே செலவு செய்ய வேண்டும்.மத்திய அரசில் இருந்து விலகல். தி.மு.க. தீர்மான விவரம்

காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மத்திய அரசில் இருந்து விலகல் ஏன்? கருணாநிதி அறிக்கை

காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இன்று (மார்ச் 5) சென்னை அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி படித்த அறிக்கை விவரம்:

இந்திய திருநாட்டின் இறையாண்மை, ஒற்றுமையும், ஒருமைப்பாடு, மதசார்பற்ற தன்மை இவற்றை கட்டிக்காக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற தி.மு.க., தான் மேற்கொண்டுள்ள இந்த கொள்கையின் அடிப்படையில்தான் எந்த ஒரு கட்சியும் அணி சேர்த்து பாடுபட்டு பணியாற்றி வருகிறது.

சனி, 5 மார்ச், 2011

காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க. கட்டுப்பட வேண்டாம்!: வீரமணி


திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தஞ்சையில் இன்று (மார்ச் 5) வெளியிட்ட அறிக்கை:

இன்று காலை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களது அறிக்கை - நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது.

தொகுதி தேர்தல் அதிகாரிகள்

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் டி.ஆர்.ஓ அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சட்டசபைத் தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் விவரம் இங்கே.

1. ஈரோடு மாவட்டம்
1. ஈரோடு (கிழக்கு) - குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர்.

2. ஈரோடு மேற்கு - சுகுமாரன், ஈரோடு ஆர்.டி.ஓ.

3. மொடக்குறிச்சி - சிவக்குமார், உதவி ஆணையர் (கலால்)

4. பெருந்துறை - செல்வராசு, மாவட்ட வழங்கல் அலுவலர்.

5. அந்தியூர் - தியாகராஜ், நேர்முக உதவியாளர் (மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சி).

6. பவானிசாகர் - நாராயணசாமி, துணை இயக்குநர், கிராம பஞ்சாயத்து.

7. கோபி - மீனா பிரியதர்ஷினி, கோபி ஆர்.டி.ஓ.

8. பவானி- தாமோதரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர்.


2. காஞ்சிபுரம் மாவட்டம்
1. சோழிங்கநல்லூர் -  உதவி ஆணையர் (கலால்) கோபெண்டு

2. ஆலந்தூர் - தாம்பரம் சிறப்பு துணை கலெக்டர் தேவதாஸ் போஸ்

3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி - கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாண்டுரங்கன்

4. பல்லாவரம் - சிறப்பு துணை கலெக்டர் (ஆர்-ஆர்) இளங்கோவன்

5. தாம்பரம் - தாம்பரம் ஆர்.டி.ஓ. சவுரிராஜன்

6. செங்கல்பட்டு - செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. லெனின் ஜேக்கப்

7. திருப்போரூர் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி வெங்கட்ராமன்

8. செய்யார் (தனி) - சிறப்பு துணை ஆட்சியர் (சிடிவி) குமரேசன்

9. மதுராந்தகம் (தனி) - மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அண்ணாதுரை

10. உத்திரமேரூர் - மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குணசேகரன்

11. காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. எம்.வீரப்பன்

ஜெய‌ல‌லிதா, விஜ‌ய‌காந்த் ச‌ந்திப்பு ப‌ட‌ங்க‌ள்

அ.தி.மு.க. கூட்டணியில். விஜயகாந்தின் தே.மு.தி.க. கடந்த பிப்ரவரி 24ம் தேதி சேர்ந்தது. அ.தி.மு.க. அலுவலகத்திற்கு அப்பொது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர். ஆனால் விஜ‌ய‌காந்த் வ‌ர‌வில்லை. இந்த‌ நிலையில் இன்று (மார்ச் 4) போய‌ஸ் கார்ட‌னில் ஜெய‌ல‌லிதாவை விஜ‌ய‌காந்த் ச‌ந்தித்தார். மொத்த‌ம் 25 நிமிட‌ங்க‌ள் இந்த‌ ச‌ந்திப்பு ந‌டந்த‌து.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி உடைகிறது. இன்று முடிவு எடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த வாசன், ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஜெயகுமார் ஆகியோர் தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், பொன்முடி, ஆற்காட்டார், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் ஆரம்பத்தில் 80 தொகுதிகள் வரை கேட்டது. கடைசியில் 65 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. தி.மு.க.வோ. 54 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கையை விரித்தது. தொகுதி ஒதுக்கீடு தவிர ஆட்சியில் பங்கு, அமைச்சரைவையில் சரி பங்கு இடம், குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சில கோரிக்கைகளையும் காங்கிரஸ் வைத்தது.

தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு

தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள்: ஜெயலலிதா அறிவிப்பு
கடந்த பிப்ரவரி 24ம் தேதி அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. ஜெயலலிதாவின் பிறந்த தினத்தில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு பண்ருட்டி ராமசந்திரன், சுதிஷ் ஆகியோர் வந்து அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பிறகு இன்று (மார்ச் 4 ) போயஸ்கார்டனுக்கு வந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.

வெள்ளி, 4 மார்ச், 2011

அது போன தேர்தல்... நாங்க சொல்லுறது இந்த தேர்தல்: விஜயகாந்த்

''இதுவரை 31,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து விட்டேன். எங்கும் மக்கள் மனதில் நிம்மதி இல்லை, யாருமே சந்தோஷமாக இல்லை. கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய கஷ்டங்கள் இவை. எங்குமே நல்ல சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின் வசதி இல்லை, இப்படி பல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பூர்த்தியாகத கிராமங்கள நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த மக்களின் கஷ்டத்தை கடந்த காலங்களில் ஆண்டவர்கள் போக்கவில்லை. நான்அதை சரி செய்யப் போகிறேன். எனக்கு இந்த ஒரு முறை மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். நான் ஒரே ஒரு தேர்தல் அறிக்கையைத்தான் வெளியிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இலவச அரிசியை நான்தான் முதலில் அறிவித்தேன். ஆனால் எனது தேர்தல் அறிக்கை காப்பி அடித்து இப்போது மற்ற கட்சிகள் தினசரி ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.

புதன், 2 மார்ச், 2011

தமிழக தேர்தல் அட்டவணை

வேட்புமனு தாக்கல் தொடக்கம்: மார்ச் 19ம் தேதி

வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்: மார்ச் 26

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 28

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 30

வாக்குப்பதிவு: ஏப்ரல் 13

வாக்கு எண்ணிக்கை: மே 13

செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளன. புது டெல்லியில் இன்று (மார்ச் 1) தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ் ஓய் குரேஷி பேட்டி அளித்த அளித்தார். பேட்டி விவரம்:

10 தொகுதிகளை பெற்றது ஏன்?: திருமாவளவன் விளக்கம்

தி.மு.க. கூட்டணியில் 10 இடங்களை பெற்றது ஏன் என்று திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 1) வெளியிட்ட அறிக்கை:

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதென 28.02.2011 அன்று கூட்டணியின் தலைவர் முதல்வர் கலைஞருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத்தக்க அளவிலான தொகுதிகளைப் பெற்று போட்டியிட வேண்டுமென்பது விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்பார்ப்பாக இருந்தது.

விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறிவிப்பு

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்று (பிப்ரவரி 28) அறிவாலயத்திற்கு வந்த திருமவளவன் கருணாநிதியோடு தொகுதி ஒப்பந்தம் போட்டார். தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருமாவளனும் கருணாநிதியும் கையெழுத்திட்டார்கள். அப்போது தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.