ஞாயிறு, 6 மார்ச், 2011

கூட்டணிக்குள் புது கட்சிகள் வரும்: கருணாநிதி பேட்டி

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல் என்கிற அறிவிப்பு வந்த பிறகு இன்று (மார்ச் 6) இரவு 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு மத்திய தி.மு.க. அமைச்சர்கள் அழகிரி, தயாநிதி மாறன், நெப்போலியன் ஆகியோர் வந்தார்கள். அதன்பிறகு முதல்வர் கருணாநிதி வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடந்தது. வெளியே வந்த கருணாநிதி நிருபர்களுக்கு அளித்தார் பேட்டி விவரம்:

கேள்வி: ம‌த்திய‌ அர‌சில் இருந்து வில‌கி 24 ம‌ணி நேர‌ம் ஆகியிருந்து. அங்கிருந்து ப‌தில் எதுவும் வ‌ந்ததா?

ப‌தில்: இதுவரை வ‌ர‌வில்லை.

கேள்வி: கூடுத‌லாக‌ மூன்று தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது ம‌ட்டும்தான் உறவு முறிவுக்கு காரணமா?

பதில்: அதுவும் ஒரு கார‌ண‌ம்

கேள்வி: தி.மு.க‌. கூட்ட‌ணிக்கு வேறு க‌ட்சிக‌ள் வ‌ர‌ வாய்ப்பு உண்டா?
 
ப‌தில்: உண்டு. இர‌ண்டொரு நாளில் தெரியும்.

கேள்வி: தி.மு.க‌. எத்த‌னை இட‌ங்க‌ளில் போட்டியிட‌ப் போகிற‌து?

ப‌தில்: விரைவில் ப‌த்திரிகைக‌ளுக்கு அறிவிப்போம்.

கருத்துகள் இல்லை: