ஞாயிறு, 6 மார்ச், 2011

பதவியைவிட கொள்கைகளே முக்கியம்: கி.வீரமணி

கலைஞர் எடுத்த - வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை உள்ளூர் தமிழர்கள் முதல் உலகத் தமிழர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். பதவிகளை விட கொள்கையே முக்கியம் என்ற ரீதியில் தி.மு.க.வின் திட்டம் அமைய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை விவரம்:

வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த தி.மு.க. அதன் தலைவருக்கு நமது பாராட்டும் மகிழ்ச்சியும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள்வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.

இனி, தி.மு.க., கறந்தபால் முலை, புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா என்ற சிந்தனைக்குரிய சித்தர்கள் வாக்கினை எண்ணிப் பார்த்து, பதவிகளைவிட, கொள்கைகளும் அவற்றைப் பரப்பிடும் இயக்கமுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது. கட்சித் தோழர்கள், இனவுணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க. வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும் என்பதே நமது அடக்கமான ஆசையாகும்.

4 கருத்துகள்:

இறைகற்பனைஇலான் சொன்னது…

ஊருக்குத்தான் உபதேசமா.....?

இறைகற்பனைஇலான் சொன்னது…

ஊருக்குத்தான் உபதேசமா.....?

சாதிக் சொன்னது…

மூன்று தொகுதிகளுக்காக கூட்டணியை முறித்த கருணாநிதி அன்று ஈழ தமிழர்களை கொல்லும் போது இதை செய்திருந்தால் இவர் உண்மையிலே தமிழர் தலைவர் என்று வரலாறு பதிந்திருக்கும்

தமிழ்வாசி - Prakash சொன்னது…

தேர்தல் ஸ்பெஷல் வலைபூவா? நல்ல முயற்சி.

எனது வலைபூவில் இன்று:
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்