செவ்வாய், 15 மார்ச், 2011

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. என்னென்ன தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுவினர் பேசி வந்தார்கள். இந்தநிலையில் இன்று (மார்ச் 15) இரவு தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திருமாவளவனும் கருணாநிதியும் கையெழுத்திட்டுள்ளனர்.


விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம்
 
1. சீர்காழி (தனி)


2. அரக்கோணம் (தனி)

3. கள்ளக்குறிச்சி (தனி)

4. உளுந்தூர்பேட்டை

5. திட்டக்குடி (தனி)

6. ஊத்தங்கரை (தனி)

7. அரூர் (தனி)

8. சோழிங்கநல்லூர்

9. காட்டுமன்னார்கோயில் (தனி)

10. செய்யூர் (தனி)

இந்த‌ 10 தொகுதிக‌ளில் இர‌ண்டு தொகுதிக‌ள் ம‌ட்டுமே பொதுத் தொகுதிக‌ள். த‌ற்போது விடுத‌லைச் சிறுத்தைக‌ள் க‌ட்சியின் எம்.எல்.ஏ.வாக‌ இருக்கும் ர‌விக்குமாரின் காட்டும‌ன்னார் கோயில் தொகுதியும் ஒதுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

கருத்துகள் இல்லை: