ஞாயிறு, 6 மார்ச், 2011

மத்திய அரசில் இருந்து விலகல். தி.மு.க. தீர்மான விவரம்

காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

2011ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நடைபெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் நடத்திய தேர்தல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண முடியாமைக்கும் கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி இந்த முறை 60 இடங்கள் என்று கேட்டு, தி.மு.க.வும் அதற்கு ஒப்புக் கொண்ட பிறகு தற்போது 63 இடங்கள் வேண்டுமென்பதும் அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாக தி.மு.க. உணர்வதால் இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியிலே தி.மு.க. தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் தி.மு.க. தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்ச்னையின் அடிப்படையில் மட்டுமே ஆதரவு அளிக்கலாம் என்ற முடிவினை எடுக்கலாமென இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மானிக்கிறது.